மனைவி மற்றும் பிள்ளைகளை இரத்த வெள்ளத்தில் துடிக்கவைத்த சாப்ட்வேர் என்ஜினீயர்! வாட்ஸ்ஆப் குரூப்பில் அனுப்பிய வீடியோவால் அதிர்ச்சி!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வசித்து வந்தவர் சுமித் குமார். இவர் சாப்ட்வேர் இஞ்சினியரான பணியாற்றி வந்தார். இவரது  மனைவி அன்சு பாலா. இவர்களுக்கு 5 வயதில் ப்ரத்மேஷ் என்ற மகனும், நான்கு வயதில் ஆரவ், ஆக்ரிதி என்ற  இரட்டை குழந்தைகளும் உள்ளனர்.

சுமித்குமார் கடந்த ஆண்டு  பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில்  பணியாற்றிவிட்டு கடந்த டிசம்பரில் ராஜினாமா செய்தார்.அதனை தொடர்ந்து வேறெங்கும் வேலைக்கு செல்லவில்லை. அதனால் வறுமையில் வாடிய சுமித் தனது குடும்பத்தினரின் தேவைகளை கூட பூர்த்தி செய்யமுடியாமல் தவித்து வந்துள்ளார். மேலும் அதனால்அவருக்கும் அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் மனமுடைந்த சுமித்குமார்  நேற்று அதிகாலை தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுக்கும் மயக்க மருந்து கொடுத்து, பின்னர் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்துள்ளார்.

அதனை தொடர்ந்து தனது குடும்பத்தினரை கொலை செய்துவிட்டேன், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மேலும் நானும் சயனைடு சாப்பிட்டுவிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன் என்ற வீடியோ ஒன்றை தனது குடும்ப வாட்ஸ் அப் குரூப்பில் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோவை கண்ட சுமித் குமாரின் தங்கை, இது தொடர்பாக சுமித்தின் மனைவி அன்சு பாலாவின் சகோதரர் பன்கஜ் சிங்கிற்கு தகவலளித்துள்ளார். பின்னர் குடியிருப்புக்கு விரைந்த பன்கஜ் கதவை திறக்க முடியாததால் போலீசாருக்கு தகவல் கூறியுள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கதவை உடைத்து பார்த்த போது அன்சு மற்றும் குழந்தைகள் கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ந்த அவர்கள் உடல்களை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் தலைமறைவான சுமித் குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

software engineer killed wife and 3 children


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->