கண்ண மூடிகிட்டு காதலர் தினம் கொண்டாடுறாங்களே.. காதலா..? காமமா..? இன்று நடப்பதை வைத்தே சொல்வதெப்படி..? - Seithipunal
Seithipunal


இன்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பீச், பார்க், தியேட்டர்கள், மால்கள் என அனைத்து காதலர்களால் நிரம்பி வழியும்.

வெளிநாடுகளில் இருந்து ரோஜா பூக்கள் வந்து இறங்கியுள்ளன. காதலர்களும், காதலிகளும் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் பரிசுகளை வாங்கி தருவர். இந்த காதல் ஜோடிகளில் பள்ளி, கல்லூரிகளை கட் அடித்து விட்டு சுற்றும் டீன் ஏஜ் இளசுகளே அதிகம்.

டீன் ஏஜில் வருவது நல்ல காதல் இல்லை என்றும் அது வெறும் காமம்தான் என்றும் ஒரு கருத்து நிலவுவது உண்டு.

ஒரு சில மட்டும் தான் முதிர்ந்த பருவம் வரை நீடிக்கின்றன. இன்றைய காதலுக்கு பெரும்பாலும் கல்லூரி முடியும் வரை தான் அதன் ஆயுட்காலம் இருக்கிறது. அதனால் தான் டீன் ஏஜ் காதல் விபரீதமானது என்கின்றனர்.

டீன் ஏஜ்'அது ஒரு புரியாத வயது' என்று மிகச் சாதாரணமாக சொல்லி விடுவது நம்மில் பலருக்கும் வழக்கமாகி விட்டது. அதுதான் புரியாத வயதா.

இல்லை, அந்த வயதுப் பிள்ளைகளின் உணர்வுகள், உருக்கங்கள், கனவுகள், கவலைகள்.. இவற்றையெல்லாம் பெற்றவர்களாகிய நாம்தான் புரிந்து கொள்வதில்லையா? நாம் ஒவ்வொருவருமே நமக்குள் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி இது!

'திடீரென்று இப்போதென்ன இப்படி ஒரு கேள்வி' என்கிறீர்களா? மீடியாக்களில் ஃப்ளாஷ் செய்யப்படுகிற பல அதிர்ச்சி செய்திகளும், பெற்றோரின் காதுகளுக்கு மட்டுமே வருகிற சில திடுக் செய்திகளும் டீன்-ஏஜ் பிள்ளைகள் பெரும் குழப்பத்தில் இருப்பதைச் சொல்கின்றன.

'ஆசிரியை திட்டியதால் 15 வயது மாணவி தற்கொலை', 'தந்தை திட்டியதால் காணாமல் போன பள்ளி மாணவன்' போன்ற செய்திகள், செய்தித் தாள்களின் தலைப்புச் செய்திகளாக அல்ல.. பெட்டிச் செய்திகளாக இடம் பெறும் அளவுக்கு சாதாரணமாகி விட்டன.

டீன் ஏஜ் பொண்ணுக்கு செக்ஸ்னா என்ன.. அது எவ்வளவு இயல்பான விஷயம்னு நான் மட்டும் புரிய வைக்கலைன்னா.. அதுவேதான் அவங்களுக்கு உலகமா ஆகி இருக்கும். ஒரு கட்டத்துல யாராவது ஒரு பையனைப் பத்தின நினைவுகள் அவங்க மனசை அலைக்கழிக்கும்.

அப்போ அவனேதான் உலகமா தெரிவான். இந்த சமயத்துலதான் பொண்ணுங்க சின்ன வயசுலயே காதல் கீதல்னு போய், கடைசியில தப்பான முடிவுகள்ல விழுறாங்க. 'இதெல்லாம் சின்ன விஷயம்.. போகப் போக சரியாயிடும்'னு நமக்குத் தெரியும்.

ஆனா, அதுக்குள்ள நம்ம பிள்ளைங்க பெருசா எதுவும் முடிவெடுத் துடாம பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை இல்லையா?

குழந்தையாகவும் இல்லாமல் இளைஞனாகவும்  இல்லாமல் இடைப்பட்ட பருவத்தில் நின்று கொண்டிருக்கிற நம் குழந்தைகளின் மனதில் ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன.

பெற்றோர், ஆசிரியர், நண்பர்கள் என்று யாருமே தங்களை சரியாகப் புரிந்து கொள்வதே இல்லை என்கிற வருத்தங்கள் இருக்கின்றன. அவர்களின் குழப்பங்களைப் போக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOVERS DAY SPECIAL


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->