தாம்பத்தியத்தில் ஆர்வம் இல்லாமல் உள்ளாரா உங்கள் துணை.! இதற்கு ஒரே தீர்வு இதுதான்.!! - Seithipunal
Seithipunal


மிக அதிக ஆர்வத்தோடு தாம்பத்தியத்தில் ஈடுபடுபவர்களுக்கும் ஒரு கட்டத்தில் அதன் மேல் எந்த ஆர்வமும் இல்லாமல் போய்விடும். சிலருக்கு உடல்ரீதியாகவும், சிலருக்கு மனரீதியாகவும் ஆர்வம் குறைந்துவிடும். எந்த ஒரு விஷயத்தில் அதீத ஆர்வமும், அதிக ஈடுபாடும் கொண்டிருந்தால் காலப்போக்கில் அதன் மீது சலிப்பு வந்துவிடும்.  

தாம்பத்திய உறவு என்பதே கவர்ச்சி சார்ந்து தான் இருக்கிறது. ஆனால், தாம்பத்தியம் என்பது காதல், அன்பு சார்ந்தது. இதனை புறிந்து கொண்டால், சீண்டலுக்கும் இன்பம் உண்டாகும், அது 60 வயது ஆனா பின்பும் தொடரும். மாறாக கவர்ச்சியால் மட்டும் உள்ளவர்களுக்கு காலப்போக்கில் இந்தப் பிரச்னை ஏற்படும். இதனால், கணவன் மனைவியின் மீதான அன்பும் குறைய ஆரம்பிக்கும். 

இதனை எப்படி சரி செய்ய?

முதலில் ஆண்கள் விஷயத்தை புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். உறவுக்கு சில நாட்கள் ஓய்வு கொடுக்கலாம். தவிர மனைவியிடம் சந்தோஷமாக இருக்க ஏராளமான விஷயங்கள் உள்ளன. மனநிலையை ரிலாக்ஸ் ஆக வைத்துக் கொள்ளுங்கள். சில நாட்கள் இவ்வித கட்டுப்பாட்டுடன் இருந்தால், இயல்பாகவே தாம்பத்திய ஆசையானது ஒருநாள் கிளர்ந்தெழும். அதனால் கவலைப்பட தேவையில்லை.

மனைவியும் இந்தப் பிரச்னை கணவனிடம் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான நேரங்களில் கணவனை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆதரவாக செயல்பட வேண்டும். இந்த விஷயத்தில் விடும் சிறிய இடைவெளியானது, தாம்பத்திய உறவை பெரிய அளவில் பலப்படுத்தும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போலத்தான் இந்த உறவும் அளவுக்கு அதிகமானால் சலித்து விடும். அதே சமயத்தில் தாம்பத்தியம் என்பது கவர்ச்சி உடல் சார்ந்தது மட்டுமல்ல… மனமும் சார்ந்தது தான். எனவே காதல் குறையாமல் பார்த்து கொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LOVE MORE YOUR PARTNER


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->