கவுசல்யா விவகாரத்தில் கட்டப்பஞ்சாயத்து!! கொளத்தூர் மணி என்ன ஜட்ச்சா?! ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்?! - Seithipunal
Seithipunal


உடுமலைபேட்டையை சேர்ந்த ஷங்கர் என்பவரை, கடந்த 2016ம் ஆண்டு கவுசல்யா தனது பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார். எனவே, கவுசல்யாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் கவுசல்யாவின் கணவர் சங்கரை வெட்டிக் கொன்றுள்ளனர். கவுசல்யாவையும் வெட்டியுள்ளனர்.

ஆனால், காயங்களுடன் உயிர்த்தப்பிய கவுசல்யா. பின்னர், கனவரை இழந்ததனால் அவரது கொலைக்கு காரணமான தனது உறவினர் மற்றும் தந்தைக்கு தண்டனையும் வாங்கிக் கொடுத்தார். இதன் பின்னர், கடவுள் மறுப்பு, சாதி ஒழிப்பு கோஷங்களை கையிலெடுத்த கவுசல்யா தற்பொழுது சக்தி என்பவரை மறுமணம் புரிந்துள்ளார். 

ஆனால், கடந்த சில நாட்களாக கவுசல்யா மறுமணம் புரிந்த சக்தியின் மீது பல்வேறு விதமான பாலியல் குற்றங்கள் வைக்கப்பட்டது. மேலும், கவுசல்யா மீதும் 6 மாத சிசுவை கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கொளத்தூர் மணி உட்பட சங்கர் அறக்கட்டளை சார்பில் இப்பிரச்சனை குறித்து பேசி சில தண்டனைகளை கொளத்தூர் மணியே வழங்கியுள்ளார். மேலும், அபராதமாக 3 லட்சம் கேட்டுள்ளார்.

ஆனால், சமூக ஆர்வலர்கள் பலர், "இந்த வழக்கில் தண்டனை அளிக்கவும், அபராதம் விதைக்கவும் கொளத்தூர் மணிக்கு என்ன அதிகாரம் உள்ளது. இது சட்டத்திற்கு புறம்பானதாக தெரிகிறது. மேலும், 6 மாத கருக்கலைப்பு சட்டப்படி குற்றமாகும். இது சட்டத்தின் மீது சமர்ப்பிக்க வேண்டிய விஷயம். தீர்ப்பு சொல்ல இவர் என்ன ஜட்ஜா? " என பேசி வருகின்றனர். 

மேலும், 'பெரியாரிஸம்' என்று கூறி கவுசல்யாவின் வாழ்க்கையை சுற்றி இருப்போர் பகடையாக பயன்படுத்தி கொண்டிருக்கின்றனர். கவுசல்யாவின் மறுமணத்திற்கு வாழ்த்து தெரிவித்து அவரது செயல்பாடுகளை ஊக்குவித்த திமுக தலைவர் ஸ்டாலின், இயக்குனர் இரஞ்சித், திருமாவளவன், கி. வீரமணி, கனிமொழி, ஆ.ராசா, நடிகர் சத்யராஜ், நடிகை சொர்னமால்யா மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால், இன்று அவருக்கு ஒரு பிரச்சனை என்றதும், எவருமே கண்டுகொள்ளவில்லை. இவ்வளவு தான் இந்த புரட்சி எல்லாம். பெண் ஒருவர் வெளியில் வந்ததும் அவரை நல்வழி படுத்தாமல், 'புரட்சி, பெரியரிஸம்' என பெரியாரின் கொள்கைகளை தவறான முறையில் எடுத்துரைத்து அவரை வைத்து அரசியல் செய்து பிழைப்பதே இன்று பலரின் வாடிக்கையாகிவிட்டது. 

இனிமேலாவது கவுசல்யா உண்மையான புரட்சி எது? யார் நல்லவர்கள்? எது பெரியாரிஸம் என நன்றாக புரிந்து கொள்வார்" என்றும் கூறுகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kowsalya sankar issue why stalin be silent


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->