இளம்பெண்ணை காவு வாங்கிய தமிழக அரசின் தாலிக்கு தங்கம் திட்டம்!! கணவனின் அதிர்ச்சி வாக்கு மூலம்!! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம், ஆண்டிக்காட்டைச் சேர்ந்த புவனேஸ்வரி (21) மற்றும் அதே ஊரைச் சேர்ந்த சண்முகம் மகன் ராஜவேல் (22) என்பவருக்கும் ஒரு ஆண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் புவனேஸ்வரி மூன்று மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

புவனேஸ்வரி தனது திருமணத்தின் போது, தமிழக அரசின் தாலிக்குத் தங்கம் திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று, புவனேஸ்வரிக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்தின் மூலமாக ஒரு பவுன் தங்கக்காசு வழங்கப்பட்டுள்ளது.

புவனேஸ்வரி, தனக்கு கொடுக்கப்பட்ட தங்கத்தை கணவர் வீட்டில் கொடுக்காமல், தனது தாயாரிடம், கொடுத்துள்ளார். புவனேஸ்வரிக்கு கிடைக்கும் தங்கத்தை விற்று ஒரு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கலாம் என இருந்த அவரது கணவருக்கு, இது அதிர்ச்சியை கொடுத்தது. 

மேலும், திருப்பி கேட்ட கணவரிடம், அதை திருப்பி வாங்கி வர முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால், கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மூன்று நாள்களுக்கு முன்பு, புவனேஸ்வரி வீட்டில் தூக்கில் சடலமாகத் தொங்கியுள்ளார். போலீஸ் விசாரணை நடத்திய பின்னரே, திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தமிழக அரசு வழங்கிய ஒரு பவுன் தங்கத்தை தாய் வீட்டில் தந்ததால், கர்ப்பிணி மனைவியை கழுத்தை இறுக்கிக் கொலை செய்ததாக கைதான கணவன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

மேலும், புவனேஸ்வரியை, ராஜவேலே கழுத்தை இறுக்கிக் கொன்றுவிட்டு, பிறகு ஒன்றும் தெரியாததுபோல் வயிற்று வலியால் தனது மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொய்யுரைத்ததை விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband killed her wife for gold


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->