மனைவியை தன்னுடன் அனுப்ப முடியாது! என மாமனார் கூறியதால் ஏற்பட்ட விபரீதம்!! மருமகன் செய்யும் காரியமா இது!! - Seithipunal
Seithipunal


சுமை தூக்கும் தொழிலாளியான தூத்துக்குடியை சேர்ந்தவர் மாரிமுத்து (52). இவருக்கு லீலாவதி என்கிற மனைவியும்,  மாரியம்மாள், வெள்ளையம்மாள் என்ற 2 மகள்களும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது.

 

நெல்லை மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள டானா பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாளின் கணவர் காளிராஜ். மீன் வியாபாரியான காளிராஜிக்கும், மாரியம்மாளுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அவ்வாறு, தகராறு நடக்கும் போதெல்லாம் மாரியம்மாள் தனது குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு வந்து விடுவார். 

இதே போல், 15 நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால்,  ஆத்திரமைடந்த மாரியம்மாள் பாக்கியநாதன்விளைவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்துள்ளார். பின், குழந்தைகளை அங்குள்ள பள்ளிக்கூடத்தில் சேர்த்து படிக்கவைத்து விட்டு மாரியம்மாள், தூத்துக்குடியில் உள்ள இரும்பு குடோன் ஒன்றிற்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

நேற்று காலையில், குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு லீலாவதி மற்றும் மாரியம்மாள் ஆகியோர் வேலைக்கு சென்று விட்டனர். நோயாளியான, மாரிமுத்து மட்டும் வீட்டில் தனியாக இருக்க, காளிராஜ் தனது மனைவியை அழைத்து செல்ல அங்கு வந்துள்ளார். அப்போது, மாரியம்மாளை தன்னுடன் அனுப்பி வைக்கும்படி, காளிராஜ் மாரிமுத்துவிடம் கேட்க மாரிமுத்து மறுத்துவிட்டார். 

இதனைத்தொடர்ந்து, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட, ஆத்திரம் அடைந்த காளிராஜ் அங்கிருந்த கயிறு ஒன்றை எடுத்து மாரிமுத்துவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இதனால், கீழே விழுந்ததில், அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிவதை பார்த்த காளிராஜ் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இதன் பின்னர், பக்கத்து தெருவில் வசிக்கும் மற்றொரு மகளான வெள்ளையம்மாள் தனது தந்தை வீட்டுக்கு வந்துள்ளார். அங்கே, தனது தந்தை பிணமாக கிடந்ததை பார்த்த வெள்ளையம்மாள் அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர், தாளமுத்துநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மாரிமுத்துவின் கழுத்து பகுதியில் கயிற்றை கொண்டு நெரித்த தடம் மற்றும் பின் தலையில் ரத்த காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

English Summary

father in law killed by son in lawSeithipunal