மாஜி சி.எம் மீதே போக்சோ வழக்கு.. "நடந்தது இதுதான்".. கொந்தளிக்கும் எடியூரப்பா.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் முன்னாள் முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எடியூரப்பா மீது 17 வயது சிறுமி பாலியல் தொந்தரவு புகார் அளித்ததை எடுத்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

இந்த விபகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளப்பை உள்ள நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மறுப்பு தெரிவித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பா, "சில நாட்களுக்கு முன்பு ஒரு பெண் என் வீட்டிற்கு வந்தார். அவர் ஏதோ பிரச்சனை என்று அழுது கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று அவரிடம் கேட்டேன்.

அதன் பிறகு நான் தனிப்பட்ட முறையில் போலீசுக்கு போன் செய்து இந்த விவகாரம் குறித்து கமிஷனரிடம் பேசினேன். அவருக்கு உதவுமாறு கமிஷ்னர் கூறினார். பின்னர், அந்த பெண் என்னை எதிர்த்து பேச ஆரம்பித்தார். இதை போலீஸ் கமிஷனர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்.‌ நேற்று போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம். இதன் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருக்கிறது" என மறுப்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yediyurappa refused harrasment alleged on him


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->