போயஸ் கார்டன் சோதனைக்கு என்ன காரணம் தெரியுமா..? பாஜக தலைவர் பரபரப்பு தகவல்.!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இந்த வருமான வரித்துறை சோதனை பற்றி கேள்விப்பட்டதும், தினகரன் ஆதரவாளர்கள் போயஸ் கார்டனில் குவிந்தனர். அதனோடு, மாநில அரசுக்கும், பாஜகவிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

இதனால் போயஸ் கார்டன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். தினகரன் ஆதரவாளர்களை போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு 9.30 மணிக்கு தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நீடித்தது.

அந்த சோதனையின் முடிவில்,  2 லேப்டாப்,  பென் டிரைவ், ஜெயலலிதாவிற்கு வந்த சில அரசியல் கடிதங்கள் மற்றும் சில ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், போயஸ் கார்டனில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை குறித்து, கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் வருமான வரித்துறையினர் தொடர்ச்சியாக சோதனை நடத்தி வருவதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளனர். அதற்காகவே சோதனை நடக்கிறது” என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

income tax raid in poyas garden


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->