திருவாரூரில் குக்கர் சின்னத்தில் நிற்க போகும் வேட்பாளர் யார் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூரில், இன்று நண்பகல் 12 மணிக்கு காவேரி திருமண மண்டபத்தில், திருவாரூர் சட்டமன்ற தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் டி.டி.வி.தினகரன் தலைமையில் நடைபெற்றது. 

இந்த ஆலோசனை கூட்டத்தில், அமமுகவின் கொள்கை பரப்பு செயலாளரும், தேனி மாவட்ட கழக செயலாளருமான திரு.தங்க தமிழ்செல்வன் அவர்கள் மற்றும் கழகத்தின் தலைமை நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள், என திரளானோர் கலந்து கொண்டனர்.

 

இடைத்தேர்தலுக்கான பணிகள் மற்றும் களப்பணி, பிரச்சாரம் குறித்தும் பேச இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன.மேலும், இந்த கூட்டத்தில், தேர்தல் வேட்பாளர் யார் என்பது குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கபட்டது.

இந்நிலையில், இன்று அக்கூட்டத்தில் பங்கேற்ற தினகரன் கட்சியின் தேர்தல் பணிகள் குறித்து விளக்கினார். இதனை தொடர்ந்து திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கான வேட்பாளராக, எஸ்.காமராஜ் அவர்களை அறிவித்துள்ளார். எஸ். காமராஜ் அவர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார் என தெரிகிறது. 

இதனால், உற்சாகமான தொண்டர்கள் அதே உற்சாகத்துடன் தேர்தல் பணிகள் செய்வார்கள் என எதிர்பார்க்கபடுகிறது. திருவாரூர் திமுகவின் கோட்டை என்று கூறப்பட்டு வரும் நிலையில், ஏற்கனவே, நடைபெற்ற ஆர்.கே. நகர் தேர்தலில் எதிர்பாராத வகையில் தினகரன் சுயேட்ச்சையாக ஜெயித்தது குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து குக்கர் திருவாரூரில் விசிலடிக்குமா? என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வெண்டும். மேலும், திருவாரூர் மன்னார்குடியில் அமமுகவினர் அதிகம் வாழும் பகுதி என்பதும், அங்கு, திரு.எஸ்.காமராஜ் அவர்களுக்கு அங்குள்ள மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கும் என்றும், அவர் மக்கள் செல்வாக்கு பெற்றவர் என்றும் அமமுகவினர் கூறிவருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

who will nominating with cooker for ammk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->