இந்தியா, பாகிஸ்தான் பிரிய யார் காரணம்! வெளியான புதிய தகவல்! வெடித்தது சர்ச்சை! - Seithipunal
Seithipunal


முகமது அலி ஜின்னாவை சுதந்திர இந்தியாவின் பிரதமராக்க இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு சம்மதித்திருந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகவே இருந்திருக்கும் என்று புத்த மத தலைவர் தலாய் லாமா கூறி இருப்பது  சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

திபெத்திய புத்தமதத் தலைவர் தலாய் லாமா அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவர் அன்மையில் கோவாவில் மாணவர்கள் கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது மாணவர் ஒருவர் தலாய்லாமாவிடம் தவறான முடிவுகள் மற்றும் உணர்வுகளிலிருந்து விடுபடுவது எப்படி?  என்று வினாவை எழுப்பினர். 

அதற்கு பதிலளித்து பேசிய தலாய் லாமா, "பெரிய பகுத்தறிவாளர்களின் முடிவுக்கு முதலில் மதிப்பளிப்பது முக்கியமானது. பின்னர் பெரிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அதனை அனைத்து தளங்களிலும் ஆய்வு செய்து முடிவு எடுப்பது நல்லது என்றும் பேசியிருந்தார். 

உதாரணமாக அவர் கூறியது சர்ச்சையை உண்டாக்கியுள்ளது. இந்தியாவை திரும்பி பார்த்தால், மகாத்மா காந்தி சுதந்திர இந்தியாவின் பிரதமர் பதவியை ஜின்னாவுக்கு வழங்கவே விரும்பினார். ஆனால் அதனை நேரு ஏற்கவில்லை. நேரு தன்னையே பிரதமராக்க விரும்பினார். அந்தநேரம் காந்தியின் விருப்பம் நிறைவேறி இருந்தால் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒன்றாகத்தான் இருந்திருக்கும் என்று கூறினார். 

நேருவை எனக்கு நன்கு தெரியும். அவர் சிறந்த மனிதர். ஆனால் சில நேரம் அவரும் தவறான முடிவுகளை எடுத்திருக்கிறார். அதனால் உங்கள் கடமைகளை உங்கள் தோளில் சுமந்து ஆராயுங்கள். பிறரிடம் அவர்களது கருத்துகளை கேளுங்கள். முடிவு எடுங்கள்”  என்று அவர் பேசினார். இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

English Summary

who is the reason divide of india pakistan


கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...கருத்துக் கணிப்பு

உலக கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி...
Seithipunal