எட்டு வழிச் சாலை தடை! வாங்கி கொடுத்தது நாங்க தான்! மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்! ஆட்டத்திலே இல்லாமல் வெற்றி பெற்றதாக அறிவித்த கட்சி! - Seithipunal
Seithipunal


எட்டு வழிச் சாலைக்கு நீதிமன்றம் தடை விதிக்க காரணமான வழக்கினை தொடுத்த ஒரே மக்கள் பிரதிநிதி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மட்டும் தான் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். ஆனால் தீர்ப்பு வந்த வேகத்தில் வெளியே வந்த திமுக வழக்கறிஞர் இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி என்று கூறியதும் அனைவருக்கும் ஷாக் ஆனது. 

மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தருமபுரி மக்கள் சார்பாக அவர் வழக்கு தொடுத்தார், கூடவே 47 விவசாயிகள் சார்பாகவும் பாமக வழக்கறிஞர் பாலு அவர்கள் வழக்கு தொடுத்தார். 
அதாவது, பெரும்பாலான விவசாயிகள் சார்பாகவும் பாட்டாளி மக்கள் கட்சி தான் 47 பேரின் வழக்குகளை நடத்தியது.

பாமக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் பாலு ஆகியோர் வாதாடினர். மேலும் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தொடர்ந்த ஒரு வழக்கு தள்ளுபடி ஆனது.

பொதுநல வழக்கில் எல்லா வழக்குகளையும் ஒன்றாக விசாரிப்பார்கள். ஆனாலும், மக்கள் பிரதிநிதியாக மருத்துவர் அன்புமணி அவர்களின் வழக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியான திமுக சார்பில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ யாரும் இந்த வழக்கில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க அடுத்தவர்கள் பெற்ற வெற்றியை தேர்தலுக்காக திமுக சொந்தம் கொண்டாடுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

which party filed case against 8wayroad


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->