நாங்க பயன்படுத்தி மிச்சமிருந்தால் தமிழகத்திற்கு தருகிறோம்.,அதிர்ச்சி அளித்த அதிமுக வேட்பாளர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராடி வருகின்றனர்.காவிரி நீருக்காக தமிழகமே போராட்டக்களமாக மாறியது.மேலும் ஆளும் கட்சியான அதிமுகவும் காவிரிக்காக உண்ணாவிரதம் உள்பட ஒருசில போராட்டங்களை நடத்தியது. 

kaveri water க்கான பட முடிவு

இந்த நிலையில் கர்நாடகாவில் வரும் மே 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது .இந்த தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் யுவராஜ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, 'நாங்கள் எப்பொழுதும் காவிரி நீரை கர்நாடகத்திற்கே கிடைக்கவே முக்கியத்துவம் கொடுப்போம்.மேலும்  கர்நாடக மாநிலத்தின் தேவைக்கு போக தண்ணீர் மீதியிருந்தால் மட்டுமே எங்கள் சகோதரர்களாக தமிழர்களுக்கு காவிரி நீரை கொடுப்போம்' என்று கூறியுள்ளார்.

கர்நாடகத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கும் கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தான் காவிரி விஷயத்தில் இரட்டை வேடம் போடுகிறது என்றால் மூன்று தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் கர்நாடக அதிமுகவும், தமிழகத்திற்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

we will give the remaining water to Tamil Nadu,The AIADMK candidate's shocking interview


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->