பாஜக கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி..பாமக நிறுவனர் ராமதாஸ்.!! - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு 102 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு  நேற்று நடைபெற்றது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 69.46% பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றுள்ளது பாமக. நேற்று மாலை மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றே வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,

தமிழ்நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி!

தமிழ்நாட்டில் 18வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7.00 மணிக்கு தொடங்கி மாலை 6.00 மணி வரை விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்திருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் மக்கள் கடும் வெயிலையும் கடந்து ஆர்வத்துடன் வந்து ஜனநாயகக் கடமையாற்றி சென்றுள்ளனர்.

தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் சராசரியாக 70 விழுக்காட்டுக்கும் கூடுதலான வாக்குகள் பதிவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்குப்பதிவின் அளவு, வாக்காளர்களின் உடல் மொழி, பொதுவான மக்களின் மனநிலை ஆகியவற்றை வைத்துப் பார்க்கும் போது தமிழ்நாடு மற்றும் புதுவையில் கடந்த தேர்தலில் கிடைத்த முடிவுகளை மாற்ற வேண்டும்; மத்தியில் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் எண்ணத்தில் பெருமளவிலான மக்கள் பா.ம.க. இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்திருப்பதாக உணர முடிகிறது.

தமிழ்நாட்டில் மக்களவை பிரதிநிதித்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர்களுக்காக மிகச் சிறந்த முறையில் களப்பணியாற்றிய அனைத்துக் கூட்டணிக் கட்சிகளுக்கும், ஆதரவு தந்த அமைப்புகளுக்கும் பா.ம.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vote ndAlliance voters thanks to ramadoss


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->