தேர்தலுக்காக ரஜினி, கமலுக்கு வேண்டுகோள் விடுத்த விஷால்! அவரது கோரிக்கை நிறைவேறுமா? - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கும் கமல் மற்றும் ரஜினிகாந்த் அரசியலில் களமிறங்கியுள்ளனர். மேலும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான கமல் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியிட்டுளளார். மேலும் அதனை தொடர்ந்து தேர்தல் வேலைகளிலும் தீவிரமாக இறங்கியுள்ளார்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் கமலுக்கு ரஜனி, கட்சி ஆரம்பித்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்து தேர்தலில் முதல்முறையாக போட்டியிட இருக்கும் மக்கள் நீதி மய்யம் தலைவர், என் நண்பர் கமல்ஹாசன் பொதுவாழ்விலும் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்’ என்று வாழ்த்து தெரிவித்து இருந்தார்.



 

அதனை தொடர்ந்து அதற்கு  கமல்ஹாசன் “எனது 40 ஆண்டுகால நண்பரே நல்லவர் துணை நின்றால் நாற்பதும் எளிதே, நாளை நமதே” என்று நன்றி தெரிவித்தார். 



 

இந்த நிலையில்  நடிகர் விஷால் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் இணைந்து செயல்பட வேண்டும் தேர்தலில் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறேன். நடிகர் சங்கத்தின் நிகழ்ச்சிக்காக அல்ல. நட்சத்திர விழா வரவேற்பு நிகழ்ச்சிக்காக அல்ல. சினிமா விழாக்களுக்காகவும் அல்ல. எந்த விஷயத்துக்காகவும் அல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்காக ஒன்று சேருங்கள். ஆமாம் நீங்கள் இருவரும் ஒன்று சேர்ந்தால் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படும் என பதிவிட்டுள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vishal request to rajini and kamal join together for election


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->