பஸ் கட்டண உயர்வால் கவிழும் ஆட்சி...கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் இணைகிறார் விஜயகாந்த்? - Seithipunal
Seithipunal


பொதுமக்களை கடுமையாக பாதித்து வரும் போக்குவரத்து கட்டண உயர்வு குறித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர். 6 ஆண்டுகளாக உயர்த்தப்படாது பேருந்து கட்டணத்தை தற்போது உயர்த்தி உள்ளனர். பேருந்து கட்டணத்தை உயர்த்தியதில் தவறு இல்லை, காலத்தின் நிலையை கருதி, எரிபொருள் உள்ளிட்டவைகளை மனதில் கொண்டு அநியாயமான முறையில் பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தவறல்ல என்று பொன் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார்.. 

ஆனால், தமிழிசை கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனக் குரல் எழுப்பினார். தமிழகத்தில் ஜனவரி 24ம் தேதி அன்று பஸ் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இது குறித்து தமிழக பா.ஜ., வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: பஸ் கட்டண உயர்வை கண்டித்து, பா.ஜ., சார்பில் ஜனவரி 24 ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும். மதுரையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு தமிழிசையும், கிருஷ்ணகிரியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு ஹச். ராஜாவும் ஈரோட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு வானதி சீனிவாசன் ஆகியோர் தலைமையில் நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டி விட்ட கதையாக அ.தி.மு.கவை மறைமுகமாக இயக்கிக் கொண்டிருக்கும் பா.ஜ.க., தமிழகத்தில் பன்முனை வேடம் பூண்டுள்ளது. திமுகவையும் விட்டுக் கொடுக்காமல், அடிமைகள் ஓ.பி.எஸ், இ.பி.எஸ். இருவரையும் முழுவதும் நம்பாமல், ரஜினி கமலை கைக்குள் போட்டுக் கொண்டு எப்படியாவது தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என கடுமையாக முயற்சித்து வருவது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. 

இந்நிலையில் ஸ்ரீ வில்லிபுத்தூருக்கு தனது மனைவி பிரேமலதா மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் உடல் நலக்குறைவில் இருந்து மீண்டு வந்த விஜயகாந்த் சாமி தரிசனம் செய்யச் சென்றிருந்தார். அங்கு ‘ஆண்டாளை’ தரிசனம் செய்தார்.பின் ஸ்ரீவில்லிபுத்துார் சன்னதிக்கு வந்து வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள ஜீயருக்கும் ஆதரவை தெரிவித்துக் கொண்டார். அவரது கட்சி அலுவலகம் இயங்கும் மண்டபத்தின் பெயரும், பொறியியல் கல்லூரியின் பெயரிலும் ஆண்டாள் வீற்றிருக்கிறாள் என்பது உலகறியும். அப்போது தனது குடும்பம், கட்சி மற்றும் நாட்டு மக்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் வைரமுத்து குறித்த தேவதாசி சர்ச்சை பற்றி கூறுகையில் “ஆண்டாள் குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறேன். உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடவுள்ளேன். ரஜினியும் கமலும் எனக்கு ஜூனியர்கள்,என தெரிவித்தார்.

ஆண்டாள் விவகாரத்தை வைத்தே பா.ஜ.கவில் இணைந்து செயல்பட  தே.மு.தி.க விரும்புவதாகவும்,முதல்வர் வேட்பாளராக தன்னை(விஜயகாந்த்) அறிவிப்பதாக இருந்தால் கட்சியை கலைத்துவிட்டு பா.ஜ.கவில் இணைய அக்கட்சி தயாராக இருப்பதாகவும் நம்பதகாத வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakanth plan to join bjp


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->