விழுப்புரத்தை பிரித்தது போல, வேலூர் மாவட்டத்தையும் 3 ஆக பிரிக்க வேண்டும்- முதல்வருக்கு, மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை!! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நடத்த சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பால், தமிழகத்தில் 33-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உதயமாகிறது. 
 
இந்நிலையில், முதல்வரின் இந்த அறிவிப்பை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வரவேற்று பதிவிட்டுள்ளார். மேலும் ஒரு கோரிக்கையும் வைத்துள்ளார். 

இது குறித்து மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது, "விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து கள்ளக்குறிச்சியை தலைநகரமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேபோல், திண்டிவனத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தையும் மூன்றாக பிரிக்க வேண்டும்!. இவ்வாறு மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Split: PMK Ramadoss Tweet


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->