வேலூரில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு.! குடியரசுத் தலைவருக்கு பறந்த கடிதம்.!! தேர்தலுக்கு முன்பே ஆட்டம் கண்ட திமுக.!! - Seithipunal
Seithipunal


வேலூர் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில், திமுக-வின் பொருளாளர் துரை முருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். கடந்த மார்ச் 30ம் தேதி துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். 

அதில் ரூ. 10.5 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. அடுத்த 2 நாட்களுக்கு பிறகு மொத்தமாக ரூ. 11.53 கோடி பணம் வேலூரில் உள்ள துறை முருகனுக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதன் தொடர்ச்சியாக ஏப்ரல் 10ம் தேதி வருமானவரித்துறை அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல்துறையினர், கதிர் ஆனந்தன் மற்றும் 2 திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டு இருந்ததால் வேலூர் பாராளுமன்ற தொகுதி மற்றும் அந்த மாவட்டத்தில் உள்ள ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கும்படி தமிழக தேர்தல் ஆணையம் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை செய்ததாக தகவல் வெளியாகியது. 

இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டத்திற்கு மட்டும் தேர்தலில் நிறுத்தி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் சார்பாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தற்போது தகவல் தெரிவிக்கின்றனர். இதனால் வேலூர் பாராளுமன்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் திமுகவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore district election to be cancelled


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->