தேர்தலுக்கு முன்பே தோற்றுப்போன திருமா.! கதறும் தொண்டர்கள்.!! - Seithipunal
Seithipunal


ஒரு வெகுசன தலைவராக உருவாகுவார், இவர் தான் தமிழர்களின் பொது அடையாளம் தமிழ் தேசியத்தின் தலைமை ஆவார் என 2009களில் திருமாவின் பின்னால் அலைந்து கொண்டிருந்தேன். தலைவர் திருமாவோ தவறான பாதையில் பயணித்து அவரை சுற்றி இருந்தவர்களின் சாதிவெறிக்கு பலியாக தன்னையும் தன் இயக்கத்தையும் தன் சாதியையுமே கூட வெகு சன மக்களிடமிருந்து வெகு தூரத்துக்கு விலகி போய்விட்டார். விளைவு இரண்டு தொகுதியில் ஒரு தொகுதியில் சொந்த சின்னத்தில் நிற்க முடியவில்லை, நல்ல நாடறிந்த பேச்சாளரை தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்ய போகாமல் சிதம்பரத்தினுள் முடக்கி போட்டுள்ளார்கள். வேட்பாளர் திருமா பெயர் சுவர் விளம்பரங்களில் இல்லாமல் வெறும் பானை சின்னம் மட்டும் வரைந்து உள்ளார்கள், பிற தொகுதிகளில் கூட விசிகவினர் கொடியை கூட்டணி கட்சியினர் பயன்படுத்துவதில்லை.

தலித் கட்சியான புரட்சி பாரதம் பூவையார் பாமகவுக்கு வாக்கு கேட்கிறார், அவர் கொடி அதிமுக-பாமக கூட்டணி கொடிகளில் பறக்கிறது, டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கொடி பறக்கிறது ஆனால் விசிகவின் கொடியை பெயரை பயன்படுத்த கூட்டணி கட்சிக்காரர்களே மறுக்கிறார்கள் எனில் அவர்களை எல்லாம் சாதி வெறியர்கள் என கூறப்போகிறீர்களா அண்ணா?

தவறான பாதை, சுய சாதிவெறியை புரட்சியாக உருவகித்து இன்பம் கொள்வது, பிற தமிழ் சமூகங்களுடன் மோதல் போக்கை கடைபிடிப்பது, தேவையின்றி தனிப்பட்ட சாதாரண சண்டைகளை சாதிவெறி என கூறி பிசிஆர் போடுவது, நாடக காதல் கும்பலை ஆதரிப்பது என திருமாவும் விசிகவும் வெகுசன அரசியல் நீரோட்டத்திலிருந்து வெகுதூரம் விலகிவிட்டனர்.

அன்று திமுக கூட்டணியில் விசிகவை இணைக்க பாமக தன் கூட்டணி தொகுதிகளில் இருந்து விசிகவுக்கு தொகுதி தருகிறேன் என்ற போது எங்களுக்கு எச்சில் இலை சோறு வேண்டாம் என பதவியை துச்சமாக மதித்த திருமா எங்கே? திமுக கூட்டணி முறிந்த உடன் 2 ஆண்டுகாலம் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த திருமா எங்கே? இன்று வெறும் ஒரு எம்பி சீட்டுக்கக இவ்வளவு அவமானப்பட வேண்டுமா?

பிற நேரங்களில் உங்களின் பேச்சுக்கு கை தட்டியவர்களும் உங்களை பிற தமிழ் சாதிகளுக்கு எதிராக  தூண்டி விட்டவர்களும் தான் இப்போது உங்கள் மீது தீண்டாமையை கடைபிடிக்கிறார்கள். தேர்தலுக்கு பின் உணர்ந்து பாதை மாறுவீர்களா?! தற்போது சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு திமுக முழு ஆதரவை தரவில்லை. திமுக பிரச்சாரத்திலும், போஸ்டரிலும் திருமாவளவனின் பெயர் இடம் பெறவில்லை மற்றும் திமுக கூட்டணி துண்டு சிட்டு விநியோகம் செய்து வாக்கு சேகரித்து வருகிறது, அந்த துண்டு சீட்டிலும் விசிகவின் சின்னம் இடம் பெறவில்லை என்று திருமாவளவனின் ஆதரவாளர் ஆதங்கம் தெரிவித்துள்ளார். எப்படி இருந்த திருமாவளவன் தற்போது திமுக கூட்டணியில் படும்பாட்டை பற்றி வருத்தத்துடன் பதிவு செய்துள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck supporters facebook post for thiruma


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->