பொன்பரப்பி சம்பவம்! விசிகவின் அட்டூழியத்தை வெளிக்கொண்டுவந்ததால், விசிகவினரால் திட்டமிட்டு தாக்கபட்ட செய்தியாளர்! - Seithipunal
Seithipunal


பொன்பரப்பி கலவரத்தை படம் எடுத்து ஊடகவியலார் பணி செய்து கொண்டிருந்த நியூஸ்18 செய்தியாளர் கலைவாணன் விசிக நிர்வாகிகளால் தாக்கப்பட்டார், இது அவர் மஞ்சள் சட்டை போட்டிருந்ததால் அவரை வன்னியர் என நினைத்து தாக்கினார்கள் என சொல்லியிருந்தனர். ஆனால் இது நம்புபடியாக இல்லை, ஏனெனில் அனைத்து கட்சி நிர்வாகிகளும் உள்ளூர் நிருபர்கள் பற்றி அறிந்தே இருப்பார்கள் என்பதால் அதை நம்ப முடியவில்லை. ஆனால் உண்மை காரணம் அதிர்ச்சியூட்டுகிறது.

அங்கனூர் திருமாவின் சொந்த ஊர், அங்கே சில நாட்களுக்கு முன் திருமாவுன் விசிகவும் வாக்கு சேகரிக்க சென்ற போது வன்னியர் பகுதியில் ஒரு துக்க வீடு காரியம் நடைபெற்றுக்கொண்டிருந்தது, இதனால் வேறு வழியில் சென்று ஓட்டு கேட்க கூறியதை அடுத்து திருமாவுடன் சென்ற விசிகவினர் பிரச்சினை செய்தனர். 

பொதுவாக ஒரு எழவு வீடு இருந்தால் அமைதியாக வேறு பாதையில் செல்வது மனித இயல்பு, ஆனால் மனிதநேயம் இல்லா விசிகவினர் சண்டை போட்டனர், இதை வீடியோ எடுத்து வெளிக்கொணர்ந்தவர் தனியார் சேனலை சேர்ந்த நிருபர் கலைவாணன். அவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரே. பொன்பரப்பியில் செய்தி சேகரிக்க சென்ற தலித் நிருபர் கலைவாணனை தலித் என்று தெரிந்திருந்தும் அங்கனூர் பிரச்சினையை வெளிக்கொண்டுவந்தது இவன் தான், இவனால் தான் தலைவர் திருமாவுக்கு பிரச்சினை என சொல்லியே அடித்துள்ளனர்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர்கள் தரப்பில் புகார் கொடுக்கப்பட சமாதானம் பேச சென்ற திருமாவளவனையும், திமுக மாவட்ட செயலாளர் சிவசங்கரையும் திருப்பி அனுப்பினார்கள். இதனால் விசிக தரப்பு நடத்திய தாக்குதல் திட்டமிட்டது என்பதாலும், பத்திரிக்கையாளர்களை அடித்திருப்பதாலும் பதற்றத்தில் உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck persons attacked media persons well planned in ponparappi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->