திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகளின் பட்டியல் இவைதான்! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன்படி, காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள், விடுதலை சிறுத்தைக்கு இரண்டு தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு இரண்டு தொகுதிகளும்,  இந்தியன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதியும், கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும், ஐஜேகே-வுக்கு ஒரு தொகுதியும் மதிமுகவிற்கு 1 மக்களைவை, 1 மாநிலங்களவை தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு  2 தொகுதியும் வழங்கப்பட்டுள்ளது. திமுக வரும் பாராளுமன்ற தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

இந்நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடப்போகும் தொகுதிகள் எவை என்று சமூக வலைதங்களில் வெளியான தகவல்.

காங்கிரஸ் : 

கன்னியாகுமரி
ஸ்ரீபெரும்புதூர்
மயிலாடுதுறை
சிவகங்கை
தேனி
திருவள்ளூர் 
காஞ்சிபுரம் 
ஆரணி 
விருதுநகர்
புதுச்சேரி.

விசிக :

சிதம்பரம் 
விழுப்புரம்.

சிபிஎம் : 

மதுரை
திருப்பூர்

சிபிஐ :

நாகப்பட்டினம்
தென்காசி

முஸ்லீம் லீக் : 

இராமநாதபுரம்

ஐ.ஜே.கே :

கள்ளக்குறிச்சி

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி :

நாமக்கல் அல்லது பொள்ளாச்சி.

மதிமுக : 

திருச்சி அல்லது ஈரோடு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck congress and mdm volumes list


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->