தேர்தலுக்கு முன்பே கெத்து காட்டும் திருமாவளவன்! அப்பாவி கிராம மக்கள் மீது விசிக-திமுக போட்ட வன்கொடுமை வழக்கு! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் தனி தொகுதியில் திமுக-விசிக வேட்பாளர் திருமாவளவனின் சொந்த ஊரான செந்துறை அருகே உள்ள அங்கனூர் கிராமத்தில் அவர் பிரச்சாரத்துக்கு வரும் போது, அதே வழியில் ஒரு வீட்டில் பெண் ஒருவர் இறந்து துக்க நிகழ்வு நடந்ததால், மாற்று வழியில் செல்லுமாறு அங்கிருந்த மக்கள் கூறியுள்ளார்கள். 

அதாவது துக்கம் விழுந்த வீட்டின் வழியாக பிரச்சாரம் செய்ய வேண்டாம் என திருமாவளவனின் சொந்த ஊர் மக்கள் கேட்டுள்ளார்கள். ஆனாலும், 2 டிஎஸ்பி 3 இன்ஸ்பெக்டர் 50 போலீசார் பாதுகாப்புடன் வந்த திருமாவளவன் கிராம மக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்காமல் அதே வழியில், மக்களின் எதிர்ப்பை மீறி வலுக்கட்டாயமாக சென்றுள்ளார். 

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் திருமாவளவன் சென்ற போது, அதனை அந்த கிராம மக்கள் தடுக்கவும் இல்லை. அங்கு மோதல் எதுவும் நடக்கவும் இல்லை. ஆனால், தற்போது அங்கனூர் கிராமத்தின் அதிமுக கட்சியை சேர்ந்த 30 வன்னியர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளார் திருமாவளவன். 

2 டிஎஸ்பி 3 இன்ஸ்பெக்டர் 50 போலீசார் கண்முன்னே, எவ்வித மோதல் சம்பவமும் நடக்காத நிலையில், அந்த இடத்திலேயே இல்லாத அதிமுக ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட 30 வன்னியர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய்வழக்கு போட்டுள்ளனர் என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். 

ஆட்சி, அதிகாரத்தில் இல்லாத நிலையிலே இப்படி என்றால், விசிக-திமுக கூட்டணியினர் வெற்றி பெற்றால் என்ன ஆகும் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். இவர்கள் வெற்றி பெற்றால் மக்கள் யாரும் நிம்மதியாக நடமாட முடியாது என்பதற்கு இதுவும் ஒரு அனுபவம் என மக்கள் கொந்தளிக்கின்றனர். 

வன்னியர்களுக்காக திமுக பாடுபட்டதாக தம்பட்டம் அடிக்கும் அரியலூர் மாவட்ட திமுக செயலாளர் சிவசங்கர், அப்பாவி வன்னியர் மக்கள் மீது வழக்கு போடப்பட்டதை கண்டும் காணாமலும் செல்வதை பார்த்த அந்த ஊர் திமுக வன்னியர்களே இவருக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்ற கோபத்தில் உள்ளனர். 

அமைதியாக செல்லும் விசிகவின் தேர்தல் பிரச்சாரம்:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck atrocity in ariyalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->