சாதிக் பாட்ஷாவை கொன்றது ஸ்டாலின் தான்.! ஆதாரம் என்னிடம் உள்ளது என்று சொன்னவர் நிலை இன்று என்ன தெரியுமா?!  - Seithipunal
Seithipunal


கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாள், 2ஜி ஸ்பெக்டரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவரும், மத்திய தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்சா அவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் இது அப்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

இவரின் மரணத்தில் இருக்கும் மர்ம முடிச்சுகள் இன்றுவரை அவிழ்க்கப்படவில்லை. இதன் காரணமாகவே ஒவ்வொரு ஆண்டும் அவரின் குடும்பத்தார் கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி அடிக்கும் போது, ஆ.ராசாவை குறிப்பிடும்படி சுவரொட்டிகள் அடித்து வருகின்றனர்.

அந்த நேரத்தில், சாதிக் பாட்சாவிடம் விசாரணை நடத்த டெல்லி வருமாறு சிபிஐ அழைத்த நிலையில், அவர் தனது வீட்டில் சாதிக் பாட்சா இதே நாளில் 2011 ஆம் ஆடும் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனால் அவரின் மரணத்தில் பல சந்தேகங்கள் தீயாய் கிளம்பியது. 

இதற்கு முக்கிய காரணம், அவரின் கிரீன்ஹவுஸ் புரமோட்டர்ஸ் நிறுவனம் ஐந்தே ஆண்டுகளில் எப்படி 600 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்ட முடிந்தது என்பது தான். இந்த 600 கோடியும் 2ஜீ ஊழல் பணம் என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய துருப்புச் சீட்டாக சாதிக்பாஷா இருந்தார். 

அந்த கால கட்டத்தில் இது குறித்து மதிமுக பொது செயலாளர் வைகோ அவர்கள் செய்தியாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களிடம் பேசும் போது, ''சாதிக் பாட்ஷாவை திமுக தான் கொன்றது. ஸ்டாலின் தான் கொன்றார். அதற்க்கு ஆதாரம் என்னிடம் உள்ளது'' என்று பகிரங்கமாக தெரிவித்திருந்தார். மேலும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கூறி இருந்தார்.

ஆனால், இன்று திமுகவின் கூட்டணியில் வைகோ அவர்களுக்கு ஏகபோக மரியாதை கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், ஒரு ராஜ்ய சபா சீட்டும் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆக., அன்று ''சாதிக் பாட்ஷாவை திமுக தான் கொன்றது. ஸ்டாலின் தான் கொன்றார்'' என்று கூறியவரான வைகோ அவர்கள், அதே கூட்டணியில் ஒரு ராஜ்ய சபா சீட்டும், ஒரு பாராளுமன்ற தொகுதியுடனும் நிம்மதியாக உள்ளார். மேலும் சமீபத்தில் ஸ்டாலின் வைகோவை என் அண்ணன் என்று கூற, வைகோ கண்ணீர் வடிய, ஸ்டாலின் என் தம்பி என்று கூற, நம் காதில் ''தென்மதுரை வைகை நதி'' பாடல் பேக் ரவுண்டில் ஒலிக்கிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO OPEN TALK ABOUT SATHIK BASHA CASE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->