வெறுங்கையுடன் வெளியேறிய வைகோ.! நடந்தது என்ன.?! வைகோ பரபரப்பு பேட்டி.!!  - Seithipunal
Seithipunal


வரும் மக்களவை தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி யார் யாருடன் வைக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி அதிமுக தலைமையில், அதிமுக, பாஜக, பாமக, என்ஆர் காங்கிரஸ், புதிய தமிழகம் இணைந்து மெகா கூட்டணி உருவாகியுள்ளது.

இந்த கூட்டணியில், பாமக-விற்கு 7 தொகுதிகளும், பாஜகவிற்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில், தேமுதிக, தமாக, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகளும் மேலும் சில கட்சிகளும் இணைய உள்ளது.

இதேபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டு, புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி உடன் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டு, தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நேற்று இரவு சென்னை அறிவாலயத்தில் திமுகவின் தேர்தல் குழுவுடன் ஆலோசனை நடத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், நேராக மெரினாவில் உள்ள கலைஞர் சமாதிக்கு சென்று மரியாதையை செலுத்தினர். இதனால் இன்று கூட்டணி இறுதி வடிவம் பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

எதிர்பார்க்கப்பட்டது போலவே, தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக-விசிக 2ம் கட்ட பேச்சுவார்த்தை இன்று காலை நடைபெற்றுது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உடன், திமுக சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, எ.வ.வேலு உள்ளிட்டபோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டு, திமுக கூட்டணியில், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டு கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இதேபோல், இந்திய கம்னியூஸ்ட் கட்சிக்கு திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்நிலையில், சற்றுமுன் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை அறிவாலயத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மதிமுக-விற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மாலை 4 மணிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், அவர் தெரிவிக்கையில், தற்போது நேரில் வந்து ஆலோசனையில் கலந்து கொண்டு ஆலோசனை மட்டுமே நடத்தி உள்ளேன். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்து சென்றார்.

திமுக தோழமை கட்சிகளான விசிக, இந்திய கம்னியூஸ்ட் கட்சிகளுடன் அவசர அவசரமாக தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டு உள்ள நிலையில், மதிமுகவின் தலைவர் நாளை தான் தொகுதி பங்கீடு முடியும் என்று தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முதல் கட்ட பேச்சு வார்த்தையின் போது, வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியது, அதில், திருச்சி, தென்காசி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளை மதிமுக கேட்டுள்ளதாக தெரிகிறது. 

இன்று நடந்த பேச்சு வார்த்தையில் மதிமுகவிற்கு ஒருவேளை ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அல்லது வைகோ அவர்கள் இரண்டு தொகுதிகளுக்கு மேல் கேட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO OPEN TALK ABOUT DMK ALLIANCE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->