திமுக கூட்டணியில் இழுபறி.! சற்றுமுன் வைகோ எடுத்த அதிரடி முடிவு.!! - Seithipunal
Seithipunal


மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சென்னை அறிவாலயத்தில் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்து இன்று மதியம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மதிமுக-விற்கு இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ஆலோசனை முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வைகோ அவர்கள், திமுக உடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. நாளை மாலை 4 மணிக்குள் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். 

மேலும், அவர் தெரிவிக்கையில், தற்போது நேரில் வந்து ஆலோசனையில் கலந்து கொண்டு ஆலோசனை மட்டுமே நடத்தி உள்ளேன். பேச்சுவார்த்தை இன்னும் நடந்து கொண்டுதான் இருக்கிறது என்று தெரிவித்து சென்றார்.

திமுக தோழமை கட்சிகளான விசிக, இந்திய கம்னியூஸ்ட் கட்சிகளுடன் அவசர அவசரமாக தொகுதி உடன்படிக்கை ஏற்பட்டு உள்ள நிலையில், மதிமுகவின் தலைவர் நாளை தான் தொகுதி பங்கீடு முடியும் என்று தெரிவித்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

முதல் கட்ட பேச்சு வார்த்தையின் போது, வைகோ அவர்கள் 4 தொகுதிகள் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியது, அதில், திருச்சி, தென்காசி, காஞ்சிபுரம், ஈரோடு உள்ளிட்ட தொகுதிகளை மதிமுக கேட்டுள்ளதாக தெரிகிறது. 

இன்று நடந்த பேச்சு வார்த்தையில் மதிமுகவிற்கு ஒருவேளை ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அல்லது வைகோ அவர்கள் இரண்டு தொகுதிகளுக்கு மேல் கேட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில், மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது என்று மதிமுக போது செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். தொகுதி பங்கீடு தொடர்பாக இன்று திமுகவுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் நாளை மதிமுக உயர்நிலை குழு கூட்டம் நடைபெற உள்ளது திமுக கூட்டணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO NEW ANNOUNCE NOW


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->