வைகோவிற்கு பேரதிர்ச்சி கொடுத்த மு க ஸ்டாலின்.! கை நழுவி போன கவலையில்.. வைகோ எடுத்த முடிவு.!!  - Seithipunal
Seithipunal


மதிமுகவுக்கு வெற்றி பெறலாம் என்று நினைக்கக்கூடிய ஒரு தொகுதியான விருதுநகர் தொகுதி மதிமுகவுக்கு இல்லை என்ற தகவல் வைகோ அவர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சென்னை அறிவாலயத்தில் நடந்த தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தையிலும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நான்கு தொகுதிகளில் மதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்,

அதில், ஒரு தொகுதியான விருதுநகர்,1996 மற்றும் 1998 இல் நடந்த மக்களவைத் தேர்தல்களில் இன்றைய விருதுநகர் தொகுதி அன்று சிவகாசி தொகுதியாக இருந்தது. இந்த இரண்டு தேர்தல்களிலும் மதிமுகவின் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் ஒருமுறை வெற்றியும், அவரின் கட்சியின் சார்ந்த சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் அவர்கள் ஒரு முறையும் வெற்றி பெற்று உள்ளனர்.

அதன்பின் கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியிலிருந்து விருதுநகர் தொகுதியாக மாற்றப்பட்ட போது வைகோ போட்டியிட்டார். அப்போது திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர், வைகோவை விட 16 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

அடுத்து கடந்த மக்களவைத் தேர்தலிலும் விருதுநகர் தொகுதியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களே போட்டியிட்டிருந்தார். இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளர் டி ராதாகிருஷ்ணன் அவர்களிடம் ஒரு லட்சத்தி 45 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வைகோ தோல்வியை தழுவினார்.

வரும் மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த 3 மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்திருந்தார்.

இந்நிலையில், விருதுநகர் தொகுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிகே விருதுநகர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக வைகோ அவர்கள் திருச்சியில் போட்டியிட திட்டமிட்டு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VAIKO IN TRICHY


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->