ஸ்டாலின் பேச்சை கேட்டு, கண்ணீர் விட்டு அழுத வைகோ! எதனால் தெரியுமா? - Seithipunal
Seithipunal


மதிமுக சார்பில் கலைஞர் புகழ் போற்றும் விழா மற்றும் மதிமுக பிரிவு செயலாளர் வழக்குரைஞர் எழுதிய 'தமிழின் தொன்மையும், சீர்மையும்- கலைஞர் உரை ' எனும் புத்தக வெளியீட்டு விழா திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் கே என் நேரு, மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந்நிகழ்ச்சியில் பேசிய வைகோ கூறுகையில், ஆரிய பகை சூழ்ந்து வரும்போது, கரிகால்  பெருவளத்தான் வீறு கொண்டு எழுந்ததுபோல,  பயங்கரவாதத்திலிருந்து தமிழகத்தை காக்க இளைஞர்கள் முக ஸ்டாலின் தலைமையில் கிளர்ந்து எழ வேண்டும் என்று கூறினார்.

இதை தொடர்ந்து பேசிய முக ஸ்டாலின் கூறியதாவது, மதிமுக சார்பில் கலைஞருக்கு விழாவா? வைகோவுடன் ஸ்டாலினா? என பலருக்கும் சந்தேகம் வரலாம் அது பொறாமை. திராவிட கட்சிகள் ஒன்று சேர்வது சிலருக்கு பிடிப்பதில்லை.

கோபாலபுரம் வீட்டில் கருணாநிதி அவர்கள் சிலவருடங்கள் ஓய்வெடுத்த வந்த நிலையில், அவரைச் சந்தித்த வைகோ, கலைஞரின் கையைப் பிடித்து, உங்களுக்கு இருந்தது போல் ஸ்டாலினுக்கும் துணையாக இருப்பேன் என்றார் அந்த வார்த்தைகளை நான் எப்போதும் மறவேன். அவருக்கும் நான் என்றும் துணையாக நிற்பேன்.

     

மேலும் தலைவர் கலைஞர் சொன்ன வார்த்தைகளை வைகோ மீறியதே இல்லை. குறிப்பாக பொடாவில் வைகோ இருந்தபோது வைகோவின் கைகளைப் பிடித்துக் கலங்கியபடி பிணையில் வெளியே வா, உடலை வருத்திக்கொள்ளாதே எனக் கூறினார். அதனையடுத்துதான் வைகோ சிறையில் இருந்து வெளியே வந்தார்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கருணாநிதி குறித்து பேசியபோது, வைகோ மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுதார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

`vaiko crying while crying stalin talk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->