#BREAKING மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி.. கல்வீச்சு.. கலவரம்..! முக்கிய தலைவரை அதிரடியாக கைது செய்த போலீசார்.!! பதற்றம்.!!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட மத்திய அரசு திட்டங்களை பிரதமர் மோடி இன்று  தொடங்கி வைக்க வருகிறார். இதற்கிடையே வழக்கம் போல நாங்கள் கருப்பு கொடி காட்டுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

பிரதமருக்கு கறுப்புக்கொடி காட்டுவது குறித்து மதிமுக தரப்பில் தெரிவித்ததாவது, இன்று குமரி வரும் பிரதமர் மோடி அவர்கள் அரசு விழாவில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு ம.தி.மு.க. சார்பில் கருப்பு கொடி காட்டப்படும்.

நெல்லை ஆரல்வாய்மொழி சந்திப்பில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கருப்பு கொடி, கருப்பு பலூன் விடும் போராட்டம் நடைபெறும். இந்த போராட்டத்தில் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்'' துன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சற்றுமுன் பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார். பிரதமரை கேரள ஆளுநர் சதாசிவம் வரவேற்றுள்ளார். 

இதற்கிடையே, இன்று நெல்லையில் பிரதமருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட ஒன்று கூடிய மதிமுக தொண்டர்கள், மோடிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர், இதனை கண்ட பாஜக தொண்டர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, இரண்டு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது.

மேலும் கல்வீச்சு சம்பவங்களும் அரங்கேறியது. இதனால் போலீசார் தடியடி நடத்தில் கூட்டத்தை கலைக்க முற்பட்டனர். அப்போது மதிமுக தொண்டர்கள், கருப்பு கொடியுடன் நான்கு பக்கமும் தெறித்து ஓடினர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்நிலையில், நெல்லை, காவல்கிணறு பகுதியில் பிரதமருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vaiko arrested for black flag protest against pm modi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->