ஒருவரையொருவர் சந்தித்திராத எதிர்க்கட்சியினர் கொல்கத்தாவில் கூடியதன் நோக்கம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒருங்கிணைந்த இந்தியா’ என்ற தலைப்பில் மம்தா பானர்ஜி தலைமையில் நடக்கும் எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டத்திற்கு அலைகடலென மக்கள் கூட்டம் கூடியது. இக்கூட்டத்தில் அகிலேஷ் யாதவ், குமாரசாமி, தேவகவுடா, முக ஸ்டாலின், பரூக் அப்துல்லா, உமர் அப்துல்லா, அரவிந்த கெஜ்ரிவால் (டெல்லி முதல்வர்), மல்லிகார்ஜூன கார்கே (காங்கிரஸ்)  உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்துகொண்டு பேசினர். அப்போது பேசிய தலைவர்கள் மோடி ஆட்சியை சாடினார். 

இந்நிலையில், இது தொடர்பாக அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது, ஒருவரையொருவர் சந்தித்திராத எதிர்க்கட்சியினர் கொல்கத்தாவில் கூடியதன் நோக்கம் மோடியை அகற்றுவதே. இந்தியாவின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவும் எதிர்க்கட்சிகளிடம்இல்லை.

ராகுல்,மாயாவதி,மம்தா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் பிரதமராகும் நோக்கிலேயே உள்ளனர். 

மக்களால் தான் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. மக்கள் தேர்ந்தெடுத்த கட்சித் தலைவர் எவரேனும் இருந்தால் அதை அரசியல் கட்சிகள் கூறலாம். 

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United India At Brigade : Ravishankar Prasad Press meet


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->