இந்தியர்களின் தலையில் கல்லையும், வாயில் மண்ணையும் போட்டவர் மோடி! பா.ஜ.க.வை கிழித்து தள்ளிய ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


கொல்கத்தாவில் பாஜகவுக்கு எதிராக, மம்தா பானர்ஜி தலைமையில் மாநில எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று தொடங்கியது. இக்கூட்டத்தில் ஸ்டாலின், தேவகவுடா, குமாரசாமி, சந்திரபாபு நாயுடு, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்நிலையில், முதலில் வங்க மொழியில் பேசத்தொடங்கிய ஸ்டாலின் வங்க தேசத்திற்கும், தமிழகத்திற்கும் உள்ள ஒற்றுமைகளை நினைவுக் கூர்ந்தார். பின்னர் தமிழில் பேசிய ஸ்டாலின் மத்திய பா.ஜ.க.வை கடுமையாக தாக்கி பேசினார்.  மேற்கு வங்கத்திற்கும், தமிழகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியாவின் 2வது சுதந்திர போராட்டத்திற்காக இரும்பு பெண்மணி மம்தாவின் அழைப்பை ஏற்று வந்துள்ளேன்.

கட்சிகள் வேறுவேறாக இருந்தாலும், அனைவரின் எண்ணமும் ஒன்றுதான், அது மோடியை வீழ்த்த வேண்டும் என்பது தான். எதிர்க்கட்சிகளே இல்லை எனக் கூறி வந்த பிரதமர் மோடி தற்போது எதிர்க்கட்சிகளை விமர்சிக்கிறார்.



 

நரேந்திர மோடி 100 பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டிருந்தால் ஆயிரம் பொய்களை கூறியிருப்பார். அந்த அளவிற்கு பொய் பிரசாரங்களை மட்டுமே மோடி கூறிவருகிறார். ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் மீட்கப்படும். அவ்வாறு மீட்கப்படும் பணம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சமாக முதலீடு செய்யப்படும் என்று கூறினார். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் இந்தியர்களின் தலையில் கல்லையும், வாயில் மண்ணையும் போட்டுவிட்டார். 

மோடி தலைமையிலான ஆட்சியில் பெட்ரோல் விலை, காய்கறிகளின் விலை, அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வேலை வாய்ப்பின்மை அதிகரிப்பு, குடிசையில் வசிப்போரின் எண்ணிக்கை உயர்வு இதுவே பிரதமர் மோடியின் சாதனையாக உள்ளது. 

ஊழல் இல்லாத ஆட்சி, ஊழல் இல்லாத ஆட்சி என்று மோடி கூறிவருகிறார். பொதுத்துறை நிறுவனத்தை தவிர்த்துவிட்டு தனியார் நிறுவனத்தில் ரபேல் ஒப்பந்தம் மேற்கொண்டது. 9 ஆயிரம் கோடி கடன் பெற்ற விஜய் மல்லையாவை வெளிநாட்டிற்கு தப்ப வைக்க அருண் ஜெட்லி உதவியது. நிரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றது இவை எல்லாம் ஊழல் கிடையாதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். 

எந்த கூட்டமாக இருந்தாலும் எதிர்க்கட்சிகள் குறித்தே பிரதமர் மோடி பேசுகிறார், எதிர்க்கட்சிகளை நினைத்து பிரதமருக்கு அச்சம். பாஜக ஆட்சி கார்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சி, மத்திய அரசை தனியார் நிறுவனம் போல் மாற்றிவிட்டார் பிரதமர் மோடி என்று கூறினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

United India At Brigade in mk stalin speech


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->