திமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின்.. மேடையில் வெக்கி தலை குனிந்த பெண் வேட்பாளர்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, நேற்று திமுகவின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்பட்டு விட்டது.

மக்களவை மற்றும் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் இருந்து மு.க.ஸ்டாலின் தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில் தென் சென்னை திமுக பெண் வேட்பாளரை மேடையில் வைத்தே அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தென் சென்னை திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சைதை பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக கூட்டம் சைதை மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi-speech-about-thamizhachi-thangapandiyan-in-saidapet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->