ஒரு ஆணியும் புடுங்கல! அப்பாவையே மிஞ்சிய உதயநிதி! தலையில் அடித்துக்கொண்டு திமுகவினர் கதறல்!  - Seithipunal
Seithipunal


நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரமானது சுவாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. அனைத்து கட்சி சார்பிலும் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்களில் அவ்வப்போது சில தலைவர்களின் பேச்சானது தங்கள் பக்கத்திற்கு பாதகமாக அமைந்து விடக் கூடிய வகையில் பேச்சு உள்ளது. அதன்படி, பேசுவதையே தவறாக பேசிய மாட்டிக்கொள்வதில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முன்னணி வகிக்கிறார். அதற்கடுத்த இடத்தில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக உருவெடுத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் தற்போது அந்த இடத்தை பிடித்துள்ளார். 

தமிழகம் முழுவதும் உதயநிதி ஸ்டாலினை முன்னிலைப்படுத்தி திமுக மேற்கொண்டு பிரச்சாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேச்சானது அந்த அளவிற்கு ரசிக்கும்படியாக இல்லை,  கருத்தாகவும் இல்லை. திமுகவிற்கு வலுசேர்க்கும் விதமாக இல்லாமல் வாயில் வந்ததையெல்லாம் பிரச்சாரம் என்ற அளவில் பேசிக் கொண்டு உள்ளார். இது போதாத குறைக்கு அவருக்கு வண்டியில் பாதுகாவலராக அந்தந்த மாவட்ட செயலாளராக இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் தொங்கி வருவது திமுகவை  பரிதாபத்திற்குரியதாக காட்டியுள்ளது. இதனையெல்லாம் தாண்டி உதயநிதி ஸ்டாலின் பேசிய பேச்சானது, திமுகவில் மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கியுள்ளது. அவரை மற்ற கட்சியினர் லொடுக்கு, துடுக்கு  என்று பேசுகிறார்கள். அதனை நிரூபிக்கும் விதமாக அவருடைய பேச்சு இருந்து வருகிறது. 

கலைஞரின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின், இங்கே நீங்கள் வாக்களித்தவர்கள் ஒரு ஆணியும் புடுங்கவில்லை என்று பேசினார். இதனைக் கேட்டு அங்கிருந்த மக்கள் எவ்வித சலனத்தையும் ஏற்படுத்தவில்லை. கைதட்டவும் இல்லை எதிர்க்கவும் இல்லை. அவரது பேச்சை மற்றவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். பேசிவிட்டு அவர் சென்று விட்டார், அவர் பேசி விட்டு சென்ற பிறகுதான் அப்பகுதி மக்களிடையே மிகப் பெரிய சலசலப்பு உருவானது.

இந்த தொகுதியில் ஆணியைப் பிடுங்க வேண்டியது  திமுக தான் என்பது உதயநிதிக்கு தெரியாமல் போனது எப்படி என்றுதான் அனைவரும் பேசிக் கொண்டார்கள். திமுகதான் இந்த திருவாரூர் தொகுதியில் 23 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறது என்பதை உதயநிதி ஸ்டாலினுக்கு யாரும் சொல்லவில்லை போல. மேலும் அரசியல் கத்துக்குட்டி என்பதை நிரூபிப்பது போல, தொகுதிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று உதயநிதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்து விட்டு செல்கிறார் என்று திமுகவினர் நொந்து போயுள்ளனர். 

தனி தொகுதியாக இருந்த இந்த திருவாரூர் தொகுதியினை, 2006 2011 ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியால், சென்னையிலேயே நிரந்தரமாக போட்டியிடும் தொகுதிகளில் போட்டியிட்டால் வெற்றி கிடைக்காது என்பதை கவனத்தில் கொண்டு பெரும்பாலான திமுக தலைவர்கள் போட்டியிலிருந்து விலகி, சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களிலும் போட்டியிட முடிவெடுத்தனர். தனித் தொகுதியாக இருந்த திருவாரூர் தொகுதியை கலைஞர் போட்டியிடுவதற்காக பொது தொகுதியாக மாற்றினார்கள். அப்படி போட்டியிட்ட கலைஞர் கருணாநிதிதான் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக தெரிவானார். 

ஏறக்குறைய 23 வருடங்களில் 15 வருடங்கள் தனித்தொகுதியாக திமுக உறுப்பினர்களும், ஏழு வருடங்கள் உதயநிதி ஸ்டாலின் தாத்தாவாகிய கலைஞர் கருணாநிதியின் தான் தொகுதியின் பிரதிநிதியாக இருந்துள்ளார்கள், இதற்கு முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தான் சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தற்போது திமுக கூட்டணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கே சென்ற உதயநிதி ஸ்டாலின் ஒரு ஆணியும் புடுங்க வில்லை என்று கூறியது திமுகவிற்கு பின்னடைவை உருவாக்கியுள்ளது.  அங்கிருந்த மக்களையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. 

எப்போதும் அவர்களுக்கு வாக்களித்து இவர்களை சட்டமன்ற உறுப்பினராக்கினால், இவர்களே வந்து ஒன்றும் செய்யவில்லை என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள் என்று புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். வழக்கமாக பிரச்சாரம் செய்யும் சிறந்த பேச்சாளர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு, உதயநிதி ஸ்டாலினை பேச்சாளராக நட்சத்திர பிரச்சார பீரங்கியாக அனுப்பிய திமுகவின் திட்டத்தை நினைத்து மூத்த திமுக தலைவர்கள் நொந்து நூடுல்ஸ் ஆகி உள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanidhi controversial speech


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->