தமிழக ஆளுநருக்கு வலுக்கும் கோரிக்கை.! டிவிட்டரை தெறிக்கவிடும் திரை பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள்.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம், உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.  
 
இதையடுத்து, சென்னை தலைமை செயலகத்தில் கடந்த செப்டம்பர் மதம் 9 ஆம் தேதி, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது," பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து,  7 பேர் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு பரிந்துரைத்து, எழுத்துபூர்வமாக ஆளுநரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. இதனையடுத்து, 7 பேர் விடுதலையில் அரசியலமைப்பு சட்டப்படி சரியான முடிவு எடுக்கப்படும் என்று ஆளுநர் மாளிகை தெரிவித்து இருந்தது. ஆனால் இதுவரை தமிழக ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்திவருகிறார்.  

இந்நிலையில், #28YearsEnoughGovernor என்ற ஹாஸ் டேக் மூலம் ட்வீட்டர் பக்கத்தில், 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழக ஆளுநருக்கு தமிழ் திரையுலகினரும், அரசியல் கட்சி தலைவர்களும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இந்த #28YearsEnoughGovernor என்ற ஹாஸ் டேக் தற்போது ட்ரண்ட் ஆகி வருகிறது.

இந்த ஹாஸ் டேக்கை பயன்படுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் இராமதாஸ் அவர்கள், ''பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகளாக சிறைகளில் வாடுகின்றனர். இனியும் அவர்களின் கொடுமை தொடரக்கூடாது. அமைச்சரவைப் பரிந்துரைப்படி அவர்களை ஆளுனர் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று வலியுறுத்தியுள்ளார்.


இதேபோல், நடிகர் விஜய் சேதுபதி, “இது தமிழர்களின் உணர்வு சம்மந்தப்பட்டது மட்டும் அல்ல, மனித உரிமை சமந்தப்பட்டது. தயவு செய்து கருணை கொள்ளுங்கள். மரியாதைக்குரிய ஆளுநரே. தற்போதே செயல்படுத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், இயக்குனர் ராம்,  “திறக்கட்டும் கதவுகள். கவர்னரைச் சென்றடையும் வரை பதிவுகள் இடுவோம்” ட்வீட் செய்துள்ளார்.



 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TWITTER TREND SET 28YearsEnoughGovernor


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->