மோடி அலை ஓய்ந்தது.! ராகுல்காந்தி தான் டாப்பு.!! வெளியான அதிர்ச்சி முடிவுகள்.!! - Seithipunal
Seithipunal


வருடா வருடம் டிவிட்டரில் கோலோச்சி கொண்டிருந்த பிரதமர் மோடி இந்த வருடம் சரிவை சந்தித்துள்ளார். சமூக வலைத்தளமான டிவிட்டர் பக்கத்தில் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியா?,  பிரதமர் நரேந்திரா மோடியா? என்ற முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி., 

* பிரதமர் மோடிக்கு 44.7 மில்லியன் பின்தொடர்பாளர்கள் உள்ளனர். ராகுலுக்கு 8.08 மில்லியன் பின் தொடர்பாளர்கள் உள்ளனர். 

* இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் மோடி 300-400 டிவிட்டுகள் செய்துள்ளார். ராகுல் காந்தி மாதம் 60-100 டிவிட்டுகள் வரை மட்டுமே செய்துள்ளார். 

* ராகுல் காந்தியின் ஒவ்வொரு டிவிட்டும் சராசரியாக 8000 தடவை ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது. மோடியின் டிவிடுகள் சராசரியாக 3000 தடவை மட்டுமே ரீ டிவிட் செய்யப்பட்டுள்ளது. 

* ராகுலின் ஓரு டிவிட்டிக்கு சராசரியாக 3000 பதில்களும், மோடியின் டிவிட்டுகளுக்கு சராசரியாக 600 பதில்களும் வந்துள்ளது.

* ராகுலின் ஒவ்வொரு டிவிட்டிற்குm சராசரியாக 25000 பேர் லைக் போட்டுள்ளனர். மோடி அவர்களுக்கு சராசரியாக 15000 பேர் மட்டுமே லைக் போட்டு உள்ளனர்.

* ராகுல் காந்தி 46 டிவிட்டில் 1 டிவிட் வேலைவாய்ப்பு குறித்தும், 17 டிவிட்டில் 1 டிவிட் விவசாயம் குறித்தும், 13 டிவிட்டில்  1 டிவிட் மோடி குறித்தும் பட்டுள்ளார்.

* மோடி அவர்களோ 462 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே வேலைவாய்ப்பு குறித்து பதிவிட்டுள்ளார். விவசாயம் குறித்து 33 டிவிட்டில் 1 டிவிட் மட்டுமே கருது பதிவிட்டுள்ளார். அதே சமயத்தில் அவர் சம்மந்தமாக 33 டிவிட்டில் 1 ட்வீட் பதிவிட்டு உள்ளார்.

இதன் மொத்த அடிப்படையில் பார்த்தால் இந்த வருடம் ட்வீட்டர் வளைத்தளத்தில் பிரதமர் மோடியை விட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வைரலாக இருந்துள்ளார். #gobackmodi என்ற ஹாஸ்டேக்கில் மட்டும் பிரதமர் மோடி வைரலாக இருந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

twitter survey modi vs rahulgandhi


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->