ஆளுநர் நல்ல முடிவெடுப்பார்., யாரும் இதில் அரசியல் செய்யாதீர்கள்., தினகரன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரிய வழக்கு கடந்த 06 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசே முடிவு செய்யலாம் என்னும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.  
 
இதையடுத்து, கடந்த 9 ஆம் தேதி, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது," பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய ஆளுநருக்கு, தமிழக அமைச்சரவை பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து,  7 பேர் விடுதலை செய்வதற்கு தமிழக அரசு பரிந்துரைத்து, எழுத்துபூர்வமாக நேற்று ஆளுநரிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது.  

இதனையடுத்து, இந்த விவகாரத்தில் இரு தினங்களுக்கு முன் தமிழக ஆளுநர் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாகவும்,  இதில் யாரும் அரசியல் செய்ய வேண்டாம் என்றும் அமமுக-வின் துணை பொது செயலாளர் தினகரன் செய்திளார்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ''முறையான முன்னேற்பாடுகளை செய்யாததே மின்தட்டுப்பாட்டுக்கு காரணம்'' என்று தமிழக அரசு மீது குற்றம் சாட்டியுள்ளார்.
 

English Summary

TTV DINAKARAN OPEN TALK ABOUT 7 PEOPLE RELEASE

செய்திகள்Seithipunal