இந்த சமயத்திலும் செந்தில் பாலாஜியை வாழ்த்திய டி.டி.வி.தினகரன்!. - Seithipunal
Seithipunal


கடந்த 2016 ஆம் ஆண்டு அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த  செந்தில் பாலாஜி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் நன்கு பாராட்டப்பட்ட அமைச்சராக இருந்தார். 

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் நடந்த அரசியல்  பிரச்சனைகளால் டிடிவி தினகரன் ஆதரவாளராக உருவெடுத்தார். தற்போது அ.ம.மு.க.வின் கரூர் மாவட்டச் செயலாளர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைந்துள்ளார்.

டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக தங்க தமிழ்ச்செல்வன், செந்தில் பாலாஜி உள்பட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இதனையடுத்து  மேல் முறையீடுக்கு செல்லாமல் இடைத்தேர்தலை சந்திக்க டிடிவி தரப்பு தயாரானது. இதில் செந்தில் பாலாஜிக்கும் டிடிவி தினகரனுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

              
இதையடுத்து செந்தில்பாலாஜி தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். செந்தில்பாலாஜியின் விலகல் குறித்து கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், யாரையும் பிடித்து வைக்க முடியாது. செந்தில்பாலாஜி எங்கிருந்தாலும் வாழ்க என குறிப்பிட்டுள்ளார். 

மேலும், சொந்த பிரச்னைகளால் ஒதுங்கி இருக்கிறேன் என்று கூறிய செந்தில் பாலாஜி, திமுகவிற்கு சென்றுவிட்டார். செந்தில்பாலாஜி அதிமுகவில் சேர்ந்திருந்தால் கூட எனக்கு வருத்தமிருந்திருக்காது. ஆனால் திமுகவில் இணைந்ததுதான் வருத்தம் என கூறியுள்ளார். 

                      

துரோகிகளுடன் இணைந்தாலே மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனால் இவர் விரோதிகளுடன் இணைந்துள்ளார். எங்கு இருந்தாலும் நல்லா இருக்கட்டும். நான் எந்த காலத்திலும் துரோகிகளுடனும், விரோதிகளுடனும் இணைய மாட்டேன் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran talk about senthil balaji


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->