கொடை நாடு விஷயத்தில் தினகரனுக்கு தொடர்புள்ளது?! போட்டு உடைத்த திவாகரன்!! - Seithipunal
Seithipunal


கோவையில் செய்தியாளர்களிடம், " அனைத்து விஷயங்களுக்கும் பதில் சொல்லும் அ.ம.மு.க துணை பொது செயலாளர் டி.டி.வி. தினகரன் இந்த விஷயத்தில் மௌனமாக இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. கைது செய்யப்பட்டதோடு இந்த விவகாரம் முடிந்துவிடவில்லை. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றலாம்.

தற்போதைய காலகட்டத்தில் எதையுமே மறைக்க முடியாது. இதில் எந்த குற்றவாளியும் தப்பித்துவிட முடியாது என்ற நிலைமை இருக்கிறது. ஆனால், அதற்கு கொஞ்சம் காலம் எடுத்துக்கொள்ளும். இந்திய அரசியல் அமைப்பில் எவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தாலும் தண்டிக்கப்படுகிறார்கள். எத்தனை முதலமைச்சர்கள், மத்திய மந்திரிகள் குற்றவாளிகாக தண்டனை அனுபவித்து வருகிறார்கள் என்பதை பார்த்துகொண்டுதான் இருக்கிறோம்.

இன்று கோவையில் அண்ணா திராவிடர் கழகத்தின் பொது செயலாளர் திவாகரன், ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் மட்டும் அங்கு சாப்பிடவில்லை.

கொடநாடு எஸ்டேட் கொலை வழக்கில் உண்மையை யாரும் மறைக்க முடியாது என்றும், குற்றவாளிகள் தப்பித்துவிட முடியாது. அமைச்சர்களும் அதிகாரிகளும் அவர்களது உறவினர்களும் அங்கு தான் உண்டனர். மேலும், அப்பல்லோவில் உணவு விலை அதிகம் அதனால் தான் அதிகம் பில் வர காரணம்.

இன்று சசிகலாவின் மீது குற்றம் சொல்பவர்கள் அன்று சசிகலா காலில் விழுந்தவர்கள் தான், அவர்கள் என்ன அன்று கோமாவிலா இருந்தார்கள்? ஜெயலலிதா இறப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் நான் ஆஜராகினேன்.

என்னிடம் குறிப்பிட்ட சில கேள்விகள் தான் கேட்கப்பட்டன. ஜெயலலிதா மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. அவரை சரியான வழி காட்டுதல் இல்லாமல் ஆஸ்பத்திரியில் சேர்த்தது தான் இந்த குழப்பத்திற்கு காரணம்.

நான் சசிகலா குடும்பத்தை விட்டு தனியாக வந்து கட்சி துவங்கிவிட்டேன். தற்பொழுது எனது கட்சிக்கு நிர்வாகிகள் அமைக்கும் பொறுப்பில் ஈடுபட்டு வருகின்றேன். தினகரன் நடத்துவது ஒரு ஜாதிக்கட்சி. அதில், தனது குடும்பத்தினருக்கு மட்டுமே பதவிகள் வழங்குகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV dhinakaran may linked with kodainadu issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->