சல்லி சல்லியாக சரியும் திமுக.. தேர்தல் நேரத்தில் வெளியான அறிவிப்பு..? ஆட்டம் காணும் கழக அஸ்திவாரம்.! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சி என்றாலே நிலஅபகரிப்பு, கட்டப்பஞ்சாயத்து என்று சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த கருத்தாக்கம் தேர்தல் நேரத்தில் சற்று வலுப்பெறவே செய்யும். இதனை உறுதி படுத்தும் வகையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அக்கட்சியினருக்கு பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் சீனிவாசன் என்பவரை சட்டவிரோத காவலில் வைத்து சில ஆவணங்களில் கையெழுத்திடும்படி மிரட்டல் விடுத்ததாக திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உள்ளிட்ட 5 பேர் மீது திருப்பூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இது அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் தொடர்பான வழக்கு என்பதால் சென்னையில் உள்ள எம்.பி. மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

தேர்தல் வரும் நேரம் என்பதால் தன்மீது களங்கம் படியக்கூடாது என்று இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் ஜெ.அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவை எதிர்த்து எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சமீபத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த சம்பவம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்குப் பின்னர் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் புகாரில் எனது பெயர் குறிப்பிடப்படவில்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே தன்னை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்திமுக சட்டமன்ற உறுப்பினர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதனை மறுத்த நீதிபதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கைச் சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு எம்எல்ஏ ஜெ.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கொலை மிரட்டல் விவகாரத்தில் சிக்கியிருப்பது அக்கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trouble-for-dmk-mla-by-murder-threat


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->