அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர் - கருணாநிதிக்கு ஓபிஎஸ் புகழாரம் ! - Seithipunal
Seithipunal


இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரண்டாவது நாளாக இன்று கூடிய சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் 12 பேருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

* முன்னாள் பிரதமர் வாஜ்பாய், நெல் ஜெயராமன், கருணாநிதி, ஏ.கே.போஸ் மற்றும் கஜா புயலால் உயிரிழந்தவர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்தனர். 

* இரங்கல் தீர்மானத்தை வாசித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசியதாவது, 

* 94 ஆண்டுகள் நாட்டுக்காகவும், கட்சிக்காகவும் உழைத்தவர் கருணாநிதி என சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் புகழாரம் சூட்டினார்.

* மனஉறுதி, எழுத்தாளர், பேச்சாளர், தமிழ் பற்றாளர், அழகு தமிழால் அனைவரையும் அரவணைத்தவர், அரசியல் மாற்று கருத்து கொண்டவர்களையும் அவரது தமிழால் ஆட்கொண்டவர் கருணாநிதி ஆவார்.

* கருணாநிதியின் மறைவு தமிழகத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு; அயராது உழைத்த கருணாநிதி, இன்று நம்மிடையே இல்லை.

* சுதந்திர தினத்தன்று, முதல்வர்கள் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தவர் மற்றும் சமூக நீதிக்காக போராடியவர்  கருணாநிதி. பல பதவிகளை வகித்த கருணாநிதி, அவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு சாதுர்யமாகவும், நகைச்சுவையாகவும் பதிலளிக்கும் திறன் கொண்டவர் ஆவார். 

* எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும், கருணாநிதி மீது கருத்து வேறுபாடு இருந்தாலும், கருணாநிதி மீது அன்பு வைத்திருந்தனர்.

* இவ்வாறு துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today Assembly Meeting - Mourning said


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->