இன்னும் 4 மாதம் தான் தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி…! அரசியல் விமர்சகர்களின் அதிரடிக் கருத்து….! - Seithipunal
Seithipunal


 

நமது அண்டை மாநிலமான கேரளாவின் தேர்தல் முடிவைக் கூட ஆர்வமாகக் கவனிக்கத் தவறியவர்கள், நடந்து முடிந்த 5 மாநில சட்டசபைத் தேர்தலின் முடிவை மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த தேர்தலில், தன் வசம் வைத்திருந்த, 3 மாநிலங்களின் ஆட்சியை, கோட்டையை பா.ஜ.க. பறி கொடுத்துள்ளது. இது பா.ஜ.க.விற்கு, பலத்த அடியையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும், இது தொடர்பாக, அவர்கள், தமிழக அரசியல் நிலைமையை ஆராய்ந்து, சில அறிக்கைகள் விடுத்துள்ளனர்.

அதில், தற்போது, மத்தியில் இருக்கும், பா.ஜ.க.வை நம்பித் தான், தமிழக அரசின் ஆட்சிக் காலம் நீடித்திருக்கிறது. மத்திய அரசும், தமிழக அரசினைப் பாதுகாத்து வருகிறது. ஆனால், தற்போது, நிலவி வரும் அசாதராண அரசியல் சூழ்நிலையில், மத்தியில், மக்கள், மிகப் பெரிய மாற்றத்தை விரும்புகின்றனர், என்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே, இன்னும் 4 மாதத்தில் நடைபெறும், பாராளுமன்றத் தேர்தலில், அதிமுக, தனது பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

அத்துடன், பாராளுமன்றத் தேர்தலில், பா.ஜ.க. தோல்வி அடைந்தால், தமிழகத்தில், ஆளும் கட்சியின் நிலை கேள்விக் குறியாகி விடும். கையில், எம்.பி-க்கள் இருப்பு இல்லாத பட்சத்தில், ஆட்சி கவிழும் சூழ்நிலை தானாக உருவாகும், என்று அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Ruling party's critical situation


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->