தொடர்ந்து 7 மணி நேரம்.! அமைச்சர் விஜயபாஸ்கருக்கு காத்திருக்கும் ஆப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப்பாக்குகளை தடையின்றி விற்பனை செய்வதற்காக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அதிகாரிகளுக்கு ஒரு சில மாதங்களில் மட்டும் ரூ.40 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டதாக வருமானவரித்துறை விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கான ஆதாரங்களையும் தமிழக அரசுக்கு வருமானவரித்துறை அனுப்பி வைத்துள்ளது. இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்த குட்கா ஊழல் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட முதல் குற்றப்பத்திரிகையில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் பெயர் இடம் பெறவில்லை. அதுமட்டுமின்றி, இவ்வழக்கின் முக்கிய விசாரணை அதிகாரிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டனர். இதனால், குட்கா ஊழலில் கோடிக்கணக்கில் கையூட்டு வாங்கிக் குவித்த பெரும்புள்ளிகள் தப்ப வைக்கப்படுவரோ என்ற ஐயம் எழுந்த நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கருக்கும், அவரின் உதவியாளருக்கும் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ அழைப்பாணை அனுப்பப்பட்டிருப்பது இந்த வழக்கில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

சட்டவிரோத குட்கா விற்பனையை அனுமதிக்க கையூட்டு தரப்பட்டது தொடர்பான குட்கா ஊழலில் அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. விஜயபாஸ்கருக்கு எதிராக வருமானவரித்துறை அறிக்கை அளித்தது மட்டுமின்றி, அவரது  வீட்டில் வருமானவரித்துறையும், சிபி.ஐயும் சோதனை நடத்தி ஏராளமான ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளது. 

இதனிடையே, குட்கா வழக்கில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணனுக்கு நேற்று முன் தினம் சி.பி.ஐ. சம்மன் அனுப்பியது. ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் இறுதிகெடுவாக சரவணனுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.


 
இந்நிலையில்,  குட்கா லஞ்ச வழக்கில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் 3வது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியதை தொடர்ந்து சுகாதாரத்துறை  அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் சரவணன் ஆஜர் ஆகி யுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள் தொடர்ந்து 7 மணி நேரமாக உதவியாளர் சரவணனினடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை இன்னும் இரண்டு நாட்களுக்கு தொடரும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும். சிபிஐ விசாரணையில் பல உண்மைகள் வெளியாகும் என தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN MINISTER VIJAYA BASKER IN CBI CASE


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->