தேர்தலில் வாக்களிக்க சென்ற மக்கள் எந்த விதமான சிரமமும் இன்றி திரும்புவதற்கு சிறப்பு அறிவிப்பை அறிவித்த தமிழக அரசு.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். தற்போது நேரம் 6 மணியை கடந்ததை அடுத்து., வாக்குசீட்டுகள் வழங்கப்பட்ட வாக்காளர்கள் மட்டும் 7 மணி வரை வாக்குகளை அளிக்கலாம் என்று தலைமை தேர்தல் தெரிவித்திருந்தார். 

தற்போது வரை மதுரையை தவிர்த்த பிற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும்., தற்போது வரை சுமார் 70 விழுக்காடு அளவிற்கு அதிகமான வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என்ற தகவல் வெளிவருகிறது. தேர்தலில் வாக்குகளை அளிப்பதற்காக வெளியூரில் பணிபுரியும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்த நிலையில்., தேர்தலில் வாக்குகளை பதிவு செய்த மக்கள் மீண்டும் பணிக்கு திரும்பும் வகையில் சென்னை., கோயம்புத்தூர்., மதுரை பகுதிகளுக்கு நாளை முதல் வரும் ஏப்ரல் 21 ம் தேதி வரை மக்கள் எந்த விதமான சிரமும் இன்றி வருவதற்கு சிறப்பு பேருந்துகளை இயக்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலமாக சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களித்த மக்கள் சிரமம் இன்றி மீண்டும் திரும்பலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn govt announce special bus till coming three days to came work cities


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->