வேலூரில் கைப்பற்றப்பட்ட பணம் எவ்வளவு.? வேலூரில் தேர்தல் நடக்குமா.?! பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கடந்த மாதம் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத 10 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அவரின் உதவியாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், வாக்காளர்களுக்கு வார்டு வாரியாக கொடுக்க கட்டு கட்டாக பணம் சாக்கு மூட்டைகளில் இருந்ததை பறிமுதல் செய்தனர்.

இது தமிழாகிய மக்களை அதிர வைத்தது. இது குறித்து துரைமுருகன் கூறுகையில், தனது உதவியாளர் வீட்டில் கைப்பற்றப்பட்ட பணத்துக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவிக்கையில், ''துரைமுருகன் உதவியாளர்கள் வீடுகளில் ரூ10.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும், மாஜிஸ்திரேட் அனுமதி அளித்ததும் வழக்கு பதிவாகும், பதிவாகும் எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், அறிக்கை அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தல் குறித்து ஆணையம் முடிவு செய்யும் என்றும் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN ELECTION OFFICER PRESS MEET


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->