#BREAKING சற்றுமுன்: ஒன்னு உறுதியானது., 9 எது.? அறிவாலயத்தில் பரபரப்பு பேட்டி.!! - Seithipunal
Seithipunal


வரும் 17 வது மக்களவைத் தெதாலை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் என்று தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. நாட்டில் முதல் கட்சியாக தேசிய கட்சியான காங்கிரஸ், முதல்கட்டமாக 15 பேர்கொண்ட வேட்பாளர் தொகுதி பட்டியலை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை, அதிமுக-பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும், திமுக-காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும் தயாராகியுள்ளது. இதில் திமுக தலைமையில் ஆன கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒதுக்கப்பட்டு, கூட்டணிக்கான கதவுகள் மூடப்பட்டன. 

அதிமுக தலைமையிலான கூட்டணியில் நாளை இறுதி ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவை என்பது குறித்த ஆலோசனை இன்று சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது.

இதில் திமுக தேர்தல் குழுவுடன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி கலந்து கொண்டு, தங்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகள் குறித்து விருப்பம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அழகிரி அவர்கள் தெரிவிக்கையில், ''நாங்கள் விரும்பும் தொகுதிகளை திமுகவிடம் கேட்டுள்ளோம். காங்கிரஸ் போட்டியிடவுள்ள தொகுதிகள் எவை என்பது விரைவில் அறிவிக்கப்படும். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ்க்கு ஒதுக்கப்பட்டுள்ள 10 தொகுதிகளில் ஒரு தொகுதி புதுச்சேரி என்பது உறுதியாகிவிட்டது, மேலும் ௯ தொகுதிகள் எவை என்பது நாளை அல்லது நாளை மறுநாள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CONGRESS LEADER PRESS MEET


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->