#BREAKING பாஜக தோல்வி.! சற்றுமுன் மௌனம் கலைத்த தமிழக முதல்வர்.!! பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்.!!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர், மிசோரம் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் அண்மையில் நடந்து முடிந்தது. இதைத்தொடர்ந்து நேற்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியாகியது. 

இந்த தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.  தேர்தல் முடிவுகளின் படி, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கிறது. தெலுங்கானாவில் மீண்டும் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியும், மிசோரம் மாநிலத்தில் எம்என்எப் கட்சியும் ஆட்சி அமைக்கிறது. நடந்து முடிந்த 5 மாநில சட்ட சபை தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவியது. குறிப்பாக மபியை தவிர மற்ற மாநிலங்களில் படு தோல்வியை சந்தித்தது பாஜக.  

இது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் எந்த கருத்தும் கூறாதநிலையில், சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவரிடம் செய்தியாளர்கள், தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு என்று நீங்கள் கருதுகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்க்கு பதிலளித்த தமிழக முதல்வர், இது பின்னடைவு கிடையாது. 109 க்கும் 114 க்கும் என்ன வித்தியாசம்., அதுமட்டுமில்லாமல் எதிர்க்கட்சிகள் அனைவருமே 1000 மற்றும் குறைவான வாக்குகளிலேயே வெற்றி பெற்றுள்ளனர். இது மாநில தேர்தல். மத்தியில் தேர்தல் வரும் போது பொறுத்து இருந்து பாப்போம்'' என்று தெரிவித்துள்ளார். மேலும் மக்களின் இந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

தமிழக முதல்வர் கூறுவது போல் பார்த்தால் பிஜேபி தோல்வியடையவில்லை என்றுதான் அர்த்தமாகிறது. அனைவரும் பாஜக படு தோல்வி என்று கூறி வரும் நிலையில், தமிழக முதல்வர் மற்றும் சற்று ஆறுதலாக கூறி இருப்பது பாஜக தொண்டர்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM TALK ABOUT 5 STATE ELECTION RESULT


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->