சேலம் 8 வழிச்சாலை எதிர்ப்பு..! எதிர்ப்புக்கான காரணம் இவர்கள் தான்..!! எடப்பாடி பரபரப்பு பேட்டி..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் இருந்து சேலத்திற்கு செல்ல புதியதாக பசுமை வழி சாலை அமைக்க அரசு முயற்சி எடுத்து வருகிறது. இந்த திட்டத்தை மத்திய அரசிடம் போராடி பெற்றுள்ளதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

இந்த சாலையானது சென்னையில் தொடங்கி சேலம் வரையில் இடையே 277 கி.மீ. தூரத்துக்கு பசுமை வழி சாலையாக அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாகும். 

இந்த சாலையானது சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சீபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக சென்னையை வந்தடையும், இந்த பசுமை வழி சாலை 8 வழி விரைவு சாலையாக அமைக்கப்பட உள்ளது. இதனிடையே 5 மாவட்ட விவசாயிகளும், விவசாய நிலத்தை கையகப்படுத்தி போடப்படும் சாலை வேண்டாம் என்று போராடி வருகின்றனர்.

இந்நிலையில். சற்றுமுன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். அதன்படி, ''நம் மாநிலத்தின் வளர்ச்சிக்கு தக்கவாறு சாலைகளை மாற்ற வேண்டும். நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 8 வழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டம் முழுமையாக நிறைவேற கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகும் என தெரிவித்தார்.

மேலும், மத்திய அரசின் இந்த 8 வழிச்சாலைக்கு நிலம் கொடுக்கும், நில உரிமையாளர்களுக்கு தகுந்த இழப்பீடு பெற்று தரப்படும். அதிகரிக்கும் வாகன விபத்துக்களால் மக்கள் உயிரிழப்பை தடுக்கவே இந்த 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வரப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே எதிர்க்கட்சிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றன''. என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm open talk about 8 way road protest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->