ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம்.! தமிழக முதல்வர் அதிரடி அறிவிப்பு.!!  - Seithipunal
Seithipunal


17 வது மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், தேனி மக்களவைத் தொகுதியில் களமிறங்கியுள்ள, துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு ஆதரவாக, தேனி மக்களவை தொகுதிக்குட்பட்ட மதுரை அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அலங்காநல்லூர் படுத்தி மக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பை அளித்தனர். கூடி இருந்த பொதுமக்கள் முன் உரையாற்றிய தமிழக  முதல்வர், ''தமிழக அரசின் உயிர் துடிப்பான, விவசாயிகளுக்காக, தமிழக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக உள்ளது.

தமிழக விவசாயிகளுக்கு தேவையான தண்ணீரைப் பெற்றுத் தருவதே எண்களின் முதல் கொள்கை. இந்த பகுதியை செழிப்பான விவசாய பகுதியாக்க அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொள்ளும்'' என்று உரையாற்றிய தமிழக முதல்வர், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதியும் கொடுத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm election campaign in alanganallur


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->