#BreakingNews : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை! வெளியாகப்போகும் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், என்ஆர் காங்கிரஸ், புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி உடன்படிக்கை ஏற்பட்டடு, தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பாஜகவிற்கு ஐந்து தொகுதிகளும், பாமகவிற்கு 7 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. என் ஆர் காங்கிரஸ் சார்பில் புதுச்சேரியில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி தொகுதியில் போட்டியிட தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது

திமுக தலைமையில் ஒரு கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐஜேகே, இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தை, மார்க்சிஸ்ட் கட்சி, மதிமுக ஆகிய கட்சிகளுடன்  கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடத்துகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, கட்சி மூத்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர். பிரதமர் பங்கேற்கும் பொதுக் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை நடத்துகின்றனர்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவை இடம்பெறச் செய்ய ஆலோசிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆலோசனை பிறகு தேமுதிகவுடன் கூட்டணியை இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm and minister meeting for alliance


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->