அதிமுக கூட்டணியில் இணைந்த புதிய கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி! - Seithipunal
Seithipunal


பாராளுமன்ற தேர்தலுக்கான அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதிமுக - பாமக - பாஜக இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. இதில் பாமக - அதிமுக கூட்டணி இறுதியாகி உள்ளது.

பாமக - அதிமுக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி 7 பாராளுமன்ற தொகுதிகளில் அதிமுக கூட்டணியில் பாமக போட்டியிட இருக்கிறது. அதேபோல் ராஜ்ய சபா சீட் ஒன்றும் பாமகவிற்கு அளிக்கப்படும் என்று அதிமுக தெரிவித்துள்ளது.

பாஜகவிற்கு மொத்தம் 8 தொகுதிகள் அதிமுக அணியில் ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணி கட்சிகளான புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி மற்றும் இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிக்கு ஒரு தொகுதி விதம் 3 தொகுதிகள் ஒதுக்கியுள்ளது. தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தேமுதிகவுக்கு எத்தனை தொகுதி என்று அறிவிப்பு வெளியாகும்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் தமாகாவிற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மயிலாடுதுறை தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tmk join with admk in volumes list


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->