தமிழகம் முழுவதும் பதிவான மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற இடைத்தேர்தலின் தொகுதிகளில் பதிவான வாக்குகளின் விபரங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இந்தியாவிற்கான பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நாட்களில் இருந்து அரசியல் கட்சிகள் தங்களுக்கான கொள்கைகள் ஒத்துப்போக கூடிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து தீவிர பிரச்சாரத்திலும்., வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நிறைவு பெற்ற நிலையில்., இன்று தேர்தல் வாக்குபதிவிற்கான நாள் ஆகும். 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவை தொகுதியில் நடைபெறும் தேர்தலில் மொத்தம் 840 நபர்கள் வேட்பாளர்களாகவும்., 18 தொகுதிக்குகளில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலில் சுமார் 277 நபர்கள் போட்டியிடுகின்றனர். தமிழகம் முழுவதும் சுமார் 67,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. 

வாக்குசாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அமைக்கப்பட்டு., காலை சுமார் 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கப்பட்டு மாலை சுமார் 6 மணிவரை வாக்குப்பதிவானது நடைபெறும். வாக்குசாவடி மையத்திற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையில் ஈடுபட காவல் துறையினர் மற்றும் துணை இராணுவ படையினர் என்று பாதுகாப்பு பணியில் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. 

காலை முதலாகவே மக்கள்., இளைஞர்கள்., திரை உலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் தீவிரமாக தங்களின் வாக்குகளை வரிசையில் காத்திருந்து செலுத்தி வருகின்றனர். தற்போது சித்திரை திருவிழா நடைபெறும் மதுரையை சேர்த்து வாக்குப்பதிவுகள் அனைத்தும் நிறைவு பெற்றதை அடுத்து தற்போது தொகுதி வாரியான வாக்குப்பதிவு நிலவரங்கள் வெளியாகியுள்ளது. 

தற்போது வரை மதுரையை தவிர்த்த பிற தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்ததை அடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பதிவாகியுள்ள வாக்குகளின் நிலவரப்படி தமிழகம் முழுவதிலும் சுமார் 70.90 விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவும்., 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறும் தொகுதியில் 71.62 விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 

திருவள்ளூரில் 72 .02 விழுக்காடு வாக்குப்பதிவும்., வடசென்னையில் 61.76 விழுக்காடு வாக்குப்பதிவும்., தென் சென்னையில் 57.43 விழுக்காடு வாக்குப்பதிவும்., மத்திய சென்னையில் 57.86 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஸ்ரீபெரும்புதூரில் 60.61 விழுக்காடு வாக்குப்பதிவும்., காஞ்சிபுரத்தில் 71.94 விழுக்காடு வாக்குப்பதிவும்., அரக்கோணத்தில் 75.45 விழுக்காடு வாக்குப்பதிவும்., கிருஷ்ணகிரியில் 73.89 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

தர்மபுரியில் 75.92 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருவண்ணாமலையில் 71.27 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஆரணியில் 76.44 விழுக்காடு வாக்குப்பதிவும்., விழுப்புரத்தில் 74.96 விழுக்காடு வாக்குப்பதிவும்., கள்ளக்குறிச்சியில் 76.36 விழுக்காடு வாக்குப்பதிவும்., சேலத்தில் 74.34 விழுக்காடு வாக்குப்பதிவும்., நமக்களில் 79.75 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஈரோட்டில் 71.15 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருப்பூரில் 64.56 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது.

நீலகிரியில் 70.79 விழுக்காடு வாக்குப்பதிவும்., கோயம்புத்தூரில் 63.67 விழுக்காடு வாக்குப்பதிவும்., பொள்ளாச்சியில் 69.98 விழுக்காடு வாக்குப்பதிவும்., திண்டுக்கல்லில் 71.13 விழுக்காடு வாக்குப்பதிவும்., கரூரில் 78.96 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருச்சியில் 71.89 விழுக்காடு வாக்குப்பதிவும்., பெரம்பலூரில் 76.55 விழுக்காடு வாக்குப்பதிவும்., கடலூரில் 74.42 விழுக்காடு வாக்குப்பதிவும்., சிதம்பரத்தில் 78.43 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 

மயிலாடுதுறையில் 71.13 விழுக்காடு வாக்குப்பதிவும்., நாகப்பட்டினத்தில் 77.28 விழுக்காடு வாக்குப்பதிவும்., தஞ்சாவூரில் 70.68 விழுக்காடு வாக்குப்பதிவும்., சிவகங்கையில் 71.55 விழுக்காடு வாக்குப்பதிவும்., மதுரையில் 62.01 விழுக்காடு வாக்குப்பதிவும்., தேனியில் 75.28 விழுக்காடு வாக்குப்பதிவும்., விருதுநகரில் 70.27 விழுக்காடு வாக்குப்பதிவும்., இராமநாதபுரத்தில் 68.26 விழுக்காடு வாக்குப்பதிவும்., தூத்துக்குடி தொகுதியில் 69.41 விழுக்காடு வாக்குப்பதிவும்., தென்காசியில் 71.60 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருநெல்வேலியில் 68.09 விழுக்காடு வாக்குப்பதிவும்., கன்னியாகுமரியில் 62.32 வாக்குகளும் பதிவாகியுள்ளது. 

இதனைப்போன்று 18 சட்டமன்ற இடைத்தேர்தல்கள் நடைபெறும் தொகுதியில் 71.62 விழுக்காடு அளவிற்கு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. தொகுதி வாரியாக பூந்தமல்லியில் 79.14 விழுக்காடு வாக்குப்பதிவும்., பெரம்பலூரில் 61.06 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருப்போரூரில் 81.05 விழுக்காடு வாக்குப்பதிவும்., சோளிங்கரில் 79.63 விழுக்காடு வாக்குப்பதிவும்., குடியாத்ததில் 81.79 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஆம்பூரில் 76.35 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஓசூரில் 71.29 விழுக்காடு வாக்குப்பதிவும்., பாப்பிரெட்டிபட்டியில் 83.31 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 

ஆரூரில் 86.96 விழுக்காடு வாக்குப்பதிவும்., நிலக்கோட்டையில் 85.50 விழுக்காடு வாக்குப்பதிவும்., திருவாரூரில் 73.38 விழுக்காடு வாக்குப்பதிவும்., தஞ்சாவூரில் 66.90 விழுக்காடு வாக்குப்பதிவும்., மானாமதுரையில் 71.22 விழுக்காடு வாக்குப்பதிவும்., ஆண்டிபட்டியில் 75.19 விழுக்காடு வாக்குப்பதிவும்., பெரியகுளத்தில் 64.89 விழுக்காடு வாக்குப்பதிவும்., சாத்தூரில் 60.87 விழுக்காடு வாக்குப்பதிவும்., பரமக்குடியில் 71.69 விழுக்காடு வாக்குப்பதிவும்., விளாத்திகுளத்தில் 78.06 விழுக்காடு வாக்குப்பதிவும் பதிவாகியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

till now parliament election voting percentage in all over tamilnadu election chief announced result


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->