தமிழக ஆட்சியை கவிழ்க்க தயாரான மூவர் அணி! அதிமுகவில் அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


நடிகர் சூர்யா நடித்த நந்தா என்ற படத்தில், லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் அறிமுகமானார் கருணாஸ். “சென்னையில் ஏதாவது கடையில் வேலை பார்த்து பிழைத்துக் கொள்ளலாம்” என்று வந்தவருக்கு, சினிமா வாய்ப்பு கிடைத்ததும், தொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்தார்.

ops eps க்கான பட முடிவு

பல படங்களில் நடித்தாலும், நடுத்தரமான காமெடியானகவே இருந்தார். இவரைக் கதாநாயகனாகப் போட்டு, திண்டுக்கல் சாரதி என்று எடுக்கப்ட்ட காமெடிப் படம் வெளியாகி வெற்றி பெற்றது. இதனால், மகிழ்ச்சி அடைந்த கருணாஸ், சில படங்களைச் சொந்தமாகத் தயாரித்தார். “அம்பாசமுத்திரம் அம்பானி” உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

 அவை சரியாகப் போகாததால், பலத்த நஷ்டம் ஏற்பட்டது. ஏகப்பட்ட கோடி ரூபாய் கடனில் இருந்தார். இந்த நிலையில் தான் 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது, தேவர் புலிப்படை என்ற அமைப்பின்  மூலமாக ஜெ.விடம் சீட் பெற்று, அதிமுக இரட்டை இலைச் சின்னத்திலேயே போட்டியிட்டு வென்றார்.

karunas tamim thaniyarasu க்கான பட முடிவு

எம்.எல்.ஏ-ஆன பிறகு, அவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கத் துவங்கியது. ஜெ. மறைவிற்குப் பின்னர், சசிகலா அணியில் சேர்ந்து, கூவத்துர் ரிசார்ட்டில் தங்கி இருந்து, ஏராளமான பணத்தைப் பெற்றார். பின் எடப்பாடி முதல்வர் ஆனதும், சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அணி மாறினார்.

தற்போது, தினகரன் 18 எம்.எல்.ஏ-க்களை வைத்துக் கொண்டு தனிக்கட்சி ஆரம்பித்து விட்டார். அந்த எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்க வழக்கு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், அதிமுக ஆதரவு எம்.எல்.ஏ-க்களான, தனியரசு, அன்சாரியுடன் சேர்ந்து கொண்டு, தங்களது ஆதரவை வாபஸ் பெறப் போவதாக அரசை மிரட்டி வருகிறார் கருணாஸ், என்று செய்திகள் வந்துள்ளன.

 ராமாராஜ்யரதத்தை தமிழகத்திற்குள் அனுமதிக்க கூடாது, என்று இந்த மூவரும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். அது முடியாத நிலையில், இந்த மூவரும், தங்களது ஆதரவை வாபஸ் பெறப் போவதாக, அதிமுக வட்டாரங்களில் செய்திகள் பரவுகின்றன. இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் சொல்லப் படுகிறது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

three members try to end this government, admkianas shocked


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->